மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 31 ஜன 2018

முதல்வரின் கையிருப்பில் வெறும் 1,520 ரூபாய்!

முதல்வரின் கையிருப்பில் வெறும் 1,520 ரூபாய்!

திரிபுரா மாநில முதல்வர் மாணிக் சர்க்கார் கையிருப்பில் வெறும் 1,520 ரூபாய் மட்டுமே இருப்பதாகத் தனது வேட்பு மனுவில் தெரிவித்துள்ளார்.

திரிபுரா மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் வரும் பிப்ரவரி மாதம் 18ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ளும் முனைப்போடு ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் செயல்பட்டு வருகின்றனர். ஆனால், எப்படியாவது ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் பாஜக முயற்சி செய்து வருகிறது.

இந்த நிலையில் திரிபுரா மாநிலம் தன்பூர் தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை அம்மாநில முதல்வர் மாணிக் சர்க்கார் நேற்று முன்தினம் தாக்கல் செய்தார். வேட்பு மனுவில் தனது சொத்து மதிப்பையும் அவர் குறிப்பிட்டுள்ளார். அவர் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், கடந்த 20ஆம் தேதி கணக்கின்படி தன்னுடைய வங்கிக் கணக்கில் 2,410.16 ரூபாய் மட்டுமே இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். இது கடந்த 2013 சட்டமன்றத் தேர்தலின்போது இவர் காட்டிய வங்கி இருப்பான 9,720.38 ரூபாயை விடக் குறைவாகும். மேலும் தன்னுடைய கையிருப்பில் வெறும் 1,520 ரூபாய் மட்டுமே இருப்பதாகக் கூறியுள்ளார்.

மாணிக் சர்க்கார் தனது முதல்வர் சம்பளமான 26,315 ரூபாய் முழுவதையும் கட்சி நிதிக்கே கொடுத்து விடுகிறார். கட்சியிலிருந்து தரும் 9,700 ரூபாயை மட்டுமே தனது சொந்த செலவுக்குப் பயன்படுத்திக் கொள்கிறார். மேலும், தன்னுடைய குடும்பச் சொத்தாக 0.0118 ஏக்கர் நிலம் உள்ளது என்றும் அதில் தனது தம்பிக்கும் பங்குள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

முதல்வரின் மனைவி பாஞ்சாலி பட்டாச்சார்யா ஓய்வுபெற்ற மத்திய அரசு ஊழியராவார். இவருடைய கையிருப்பில் 20,140 ரூபாய் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

புதன் 31 ஜன 2018