மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 31 ஜன 2018

நீதிபதிகளுக்கு 200 சதவிகித ஊதிய உயர்வு!

நீதிபதிகளுக்கு  200 சதவிகித ஊதிய உயர்வு!

உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கு 200 சதவிகிதம் ஊதிய உயர்வு அளித்து மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

2016ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகளின் சம்பளத்தை உயர்த்துமாறு அப்போதைய உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர் மத்திய அரசுக்குக் கடிதம் ஒன்றை எழுதினார்.

இதுகுறித்து கடந்த நாடாளுமன்றக் குளிர்கால கூட்டத்தொடரில் மசோதா அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மசோதாவுக்கு நாடாளுமன்றத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டதையடுத்து, ஜனாதிபதி ஒப்புதல் பெறப்பட்டது. இந்த நிலையில், உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றம் நீதிபதிகளுக்கு 200 சதவிகிதம் ஊதிய உயர்வு அரசாணையை மத்திய அரசு நேற்று (ஜனவரி 30) வெளியிட்டது.

அதன்படி, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியின் மாதச் சம்பளம் ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.2.80 லட்சமாக உயரும். உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் உயர் நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகளுக்கான சம்பளம் ரூ.90 ஆயிரத்தில் இருந்து ரூ.2.50 லட்சமாக உயரும். உயர் நீதிமன்ற நீதிபதிகளின் சம்பளம் ரூ.80 ஆயிரத்தில் இருந்து ரூ.2.25 லட்சமாக உயரும். நீதிபதிகளுக்கான ஊதிய உயர்வு 2016 ஜனவரி முதல் முன் தேதியிட்டு வழங்கப்படும். ஏழாவது ஊதியக்குழு பரிந்துரையின் அடிப்படையில் இந்தச் சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

2 நிமிட வாசிப்பு

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்! ...

3 நிமிட வாசிப்பு

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்!

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி ...

3 நிமிட வாசிப்பு

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி

புதன் 31 ஜன 2018