மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 31 ஜன 2018

கோயம்பேடு: தொடர் சரிவில் காய்கறிகள்!

கோயம்பேடு: தொடர் சரிவில் காய்கறிகள்!

சென்னை கோயம்பேடு மொத்த விற்பனைச் சந்தையில் காய்கறிகளின் விலை முன்னெப்போதும் இல்லாத அளவில் குறைந்துள்ளதற்குத் தென்கிழக்கு பகுதிகளில் பெய்த வடகிழக்கு பருவ மழையே காரணமாகும் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னை கோயம்பேட்டில் காய்கறிகளின் வரத்து அதிகமாக இருப்பதால் காய்கறிகளின் விலை முன்னெப்போதும் இல்லாத அளவில் குறைந்துள்ளது. இதற்கு அதிக மழையே காரணம் என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். தென்கிழக்குப் பகுதிகளில் பெய்த அதிகமான வடகிழக்கு பருவமழையே இவ்வாறு விலை குறைவதற்கான காரணமாகும். கடந்த நவம்பர் மாதத்தில் கிலோ ஒன்றுக்கு ரூ.160 ஆக இருந்த (சாம்பார்) வெங்காயம் ரூ.35 ஆகவும், தக்காளியின் விலை கிலோ ஒன்றுக்கு ரூ.20லிருந்து ரூ.8 ஆகவும் குறைந்துள்ளது. இந்த விலை அடுத்த அறுவடை வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நூல்கோல், முள்ளங்கி, சவ்சவ், பீட்ரூட், வெண்டைக்காய், புடலங்காய் கிலோ ஒன்றுக்கு ரூ.5 முதல் ரூ.10 வரையில் விற்கப்படுகிறது. முருங்கை விலையில் கடந்த நவம்பர் முதல் எந்தவித மாற்றமும் இல்லாமல் கிலோ ஒன்றுக்கு ரூ.50 முதல் ரூ.60 வரை விற்கப்படுகிறது. கோயம்பேடு காய்கறி, பழங்கள் மற்றும் பூக்கள் வியாபாரி நலச் சங்கத் தலைவர் எம்.தியாகராஜன், “கோயம்பேடு சந்தையில் முன்பு தினமும் 400 முதல் 450 காய்கறி லாரிகள் வருவது வழக்கம். தற்போது தினமும் 550 காய்கறி லாரிகள் வருகின்றன. அதிக மழையினால் வரத்து அதிகரித்துள்ளது. இந்த நிலை பிப்ரவரி 20 வரை நீடிக்கும்” என்று கூறுகிறார்.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

புதன் 31 ஜன 2018