மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 31 ஜன 2018

குப்பை மறுசுழற்சி விழிப்புணர்வு நிகழ்ச்சி!

குப்பை மறுசுழற்சி விழிப்புணர்வு நிகழ்ச்சி!

விருதுநகர் மாவட்டத்தில் கின்னஸ் சாதனை முயற்சியாகப் பள்ளி மாணவர்கள் சுமார் 20 ஆயிரம் பேர் பங்கேற்ற குப்பை மறுசுழற்சி விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

விருதுநகர் கே.வி.எஸ் பள்ளி 1889ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இம்மாவட்ட ஆட்சியர் சிவஞானம் தலைமையில் கே.வி.எஸ் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் நேற்று (ஜனவரி 30) குப்பை மறுசுழற்சி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் 20 ஆயிரம் மாணவர்களுக்குக் குப்பைகளை வகைப்படுத்துதல் பற்றிய 40 நிமிட விழிப்புணர்வு வகுப்பு எடுக்கப்பட்டது.

இந்த விழிப்புணர்வு வகுப்பில் தாவரக் குப்பை குறித்தும் மறுசுழற்சி செய்யக்கூடிய பிளாஸ்டிக் மற்றும் இரும்புக் குப்பை குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் மின்சாதனக் குப்பை மற்றும் மருத்துவக் குப்பை ஆகியவற்றின் தன்மைகள் பற்றியும், இவற்றால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் தீமைகள் குறித்தும் விளக்கமாக எடுத்துரைக்கப்பட்டது.

மாணவர்கள் விழிப்புணர்வு வகுப்பைக் கேட்டுக் கற்றுக்கொண்டதற்கு ஏற்ப அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட பொருள்களில் இருந்த குப்பைகளைச் சரியாகப் பிரித்து, உரிய நிறத்தில் உள்ள குப்பைத் தொட்டியில் போட்டனர். இந்நிகழ்வுகளை கின்னஸ் கண்காணிப்பாளர் டேனியல் செல்வராஜ் குழுவினரும் மற்றும் எட்டு பேர் கொண்ட குழுவினரும் பதிவு செய்துகொண்டனர். இம்முயற்சி சுற்றுப்புறம் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இருப்பதாக பொதுமக்கள் தெரிவிக்கிறார்கள். குப்பை இல்லா நகரமாக இருக்க மாணவர்கள் செயல்பட வேண்டும் என்று இந்நிகழ்ச்சி வலியுறுத்துகிறது.

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

5 நிமிட வாசிப்பு

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ...

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ‌நிறுவனத்தின் எச்சரிக்கை!

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

புதன் 31 ஜன 2018