மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 31 ஜன 2018

சிறந்த பெண் அரசியல் தலைவர்!

சிறந்த பெண் அரசியல்  தலைவர்!

சர்வதேச மனித உரிமைகள் ஆணையம் 2017ஆம் ஆண்டின் சிறந்த பெண் அரசியல் தலைவருக்கான விருதை தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு வழங்கியுள்ளது.

தமிழிசை சவுந்தரராஜன் கடந்த 2014ஆம் ஆண்டு தமிழக பாஜகவின் தலைவராக நியமிக்கப்பட்டார். மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக பாஜக தலைவராக அவர் நீடித்து வருகிறார். இந்த நிலையில் ஆண்டுதோறும் சர்வதேச மனித உரிமைகள் ஆணையம் சிறந்த பெண் அரசியல் தலைவருக்கான விருதை வழங்கி வருகிறது. அந்த வகையில் 2017ஆம் ஆண்டுக்கான சிறந்த பெண் அரசியல் தலைவராக தமிழிசை சவுந்தரராஜன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

பாஜக தலைமையகமான கமலாலயத்தில் நேற்று (ஜனவரி 30) நடைபெற்ற நிகழ்ச்சியில், 2017ஆம் ஆண்டு சிறப்பாக அரசியல் மற்றும் பொதுநலச் சேவைகளில் ஈடுபட்டதற்காக , தமிழிசை சவுந்தரராஜானுக்கு சிறந்த பெண் அரசியல்வாதி என்ற விருதை சர்வதேச மனித உரிமைகள் ஆணையம் வழங்கியது.

அதன்பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த தமிழிசை சவுந்தரராஜன், “சர்வதேச மனித உரிமைகள் ஆணையத்திடமிருந்து சிறந்த தலைமை பண்புக்கான விருதை பெற்றிருப்பதில் எனக்கு மகிழ்ச்சி. அவர்களாகவே கருத்துக்கணிப்பை நடத்தி இந்த விருதுக்கு என்னை தேர்ந்தெடுத்துள்ளார்கள். ஒரு வாரத்துக்கு முன்பு என்னைச் சந்திக்க வருவதாகக் கூறியிருந்தார்கள். விருதைப் பற்றி எனக்குத் தெரியாது. இந்த விருதை கட்சிக்காகவும் நாட்டுக்காகவுமே சமர்ப்பிக்கிறேன். ஏனென்றால் நான் பணியாற்றுவது கட்சிக்காகவும் நாட்டுக்காகவும் தான். எனது பணி மக்கள் சேவையாகத் தொடரும்” என்று தெரிவித்தார்.

மேலும், செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளிக்கையில், பேருந்து கட்டணம் குறைக்கும் வரை போராட்டம் தொடரும் என்றும் பெட்ரோல் டீசலுக்கான விலையை ஜிஎஸ்டி வரிக்குள் கொண்டுவர முயற்சிப்பதாகவும் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

2 நிமிட வாசிப்பு

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்! ...

3 நிமிட வாசிப்பு

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்!

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி ...

3 நிமிட வாசிப்பு

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி

புதன் 31 ஜன 2018