மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 31 ஜன 2018

ஏர்டெல் - ஜியோவுடன் மோதும் வோடஃபோன்!

ஏர்டெல் - ஜியோவுடன் மோதும் வோடஃபோன்!

ஜியோ மற்றும் ஏர்டெலுக்குப் போட்டியாக வோடஃபோன் நிறுவனமும் தனது தினசரி டேட்டா சலுகையைப் புதுப்பித்துள்ளது.

இந்தியத் தொலைத் தொடர்புச் சந்தையில் ரிலையன்ஸ் ஜியோ அறிமுகமானதிலிருந்தே கடுமையான போட்டி நிலவி வருவதோடு, கட்டணக் குறைப்பு அறிவிப்புகளும் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. அந்த வகையில் இந்தியாவின் மிகப்பெரிய நெட்வொர்க் நிறுவனமான ஏர்டெல், ரூ.199 கட்டணத்திலான தனது திட்டத்தைப் புதுப்பித்து தினசரி 1.4 ஜிபி அளவிலான டேட்டாவை 28 நாள்களுக்குப் பெறும் அறிவிப்பை வெளியிட்டது. அதைத் தொடர்ந்து ஜியோ நிறுவனமும் குடியரசு தினச் சலுகை என்ற பெயரில், தனது அனைத்து சலுகைகளுக்கான டேட்டா வரம்பையும் 1 ஜிபியிலிருந்து 1.5 ஜிபியாகவும், 1.5 ஜிபியிலிருந்து 2 ஜிபியாகவும் உயர்த்தியது.

இந்த நிலையில் தற்போது ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்களுக்குப் போட்டியாக வோடஃபோன் நிறுவனமும் தனது ரூ.198 திட்டத்தில் தினசரி டேட்டா வரம்பான 1 ஜிபி அளவை 1.4 ஜிபியாக உயர்த்தியுள்ளது. இதன்படி, 198 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்யும் வோடஃபோன் வாடிக்கையாளர்கள் 28 நாள்களுக்குத் தினசரி 1.4 ஜிபி அளவிலான இலவச டேட்டாவுடன், 100 எஸ்.எம்.எஸ்களையும் இலவசமாக அனுப்பிக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

புதன் 31 ஜன 2018