மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 31 ஜன 2018

மின்னம்பலம் அரங்கில் கல்லூரி மாணவிகள்!

மின்னம்பலம் அரங்கில் கல்லூரி மாணவிகள்!

திருப்பூரில் நடைபெற்றுவரும் புத்தகக் காட்சியில் நேற்று (ஜனவரி 30) கல்லூரி மாணவிகளும் திருப்பூர் மாவட்ட நீதிபதியும் நமது மின்னம்பலம் அரங்குக்கு வருகை புரிந்தனர்.

திருப்பூர் பின்னல் புத்தக அறக்கட்டளை மற்றும் பாரதி புத்தகாலயம் இணைந்து நடத்தும் 15ஆவது திருப்பூர் புத்தகத் திருவிழா பத்மினி கார்டனில் ஜனவரி 25ஆம் தேதி தொடங்கியது. பிப்ரவரி 4ஆம் தேதி வரை இந்தப் புத்தகக் காட்சி நடைபெற இருக்கிறது. மொத்தம் 145 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் அரங்கு எண் 130இல் தமிழின் முதல் மொபைல் பத்திரிகையான மின்னம்பலம் பதிப்பகம் இடம்பிடித்திருக்கிறது.

தினமும் காலை 11 மணி முதல் இரவு 9.30 மணி வரை புத்தக் காட்சி நடைபெறுகிறது. இதில் நேற்று நமது மின்னம்பலம் அரங்குக்குத் திருப்பூர் AVP கலை மற்றும் அறிவியல் கல்லூரியைச் சேர்ந்த மாணவிகள் வருகை தந்தனர். நமது அரங்கில் உள்ள பதிப்பகப் புத்தகங்களை பார்த்த அவர்கள் புதுமையாக இருப்பதாக தெரிவித்தனர். மாணவிகளில் பெரும்பாலோர் பொருளாதாரம் சம்பந்தமாகப் படிப்பவர்கள் என்பதால் ஜெ.ஜெயரஞ்சன் எழுதிய பொருளாதாரம் சம்பந்தமான புத்தகங்களை விரும்பி பார்த்தனர்.

புத்தகக் காட்சியை பார்வையிடுவதற்காகவே கல்லூரி ஆசிரியர்கள் அழைத்து வந்தததாகத் தெரிவித்த அவர்கள், புத்தகக் காட்சி முடிவடைவதற்குள் மீண்டும் வந்து ஜெயரஞ்சன் எழுதிய புத்தகங்களை வாங்கி செல்வதாக கூறினார்கள். மேலும், பொருளாதாரம் சம்பந்தமாக எழுதப்பட்டுள்ள இந்தப் புத்தகங்கள் எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் தெரிவித்தனர்.

மாணவிகள் மொபைல் பயன்படுத்தக் கூடாது என்பதால் கல்லூரி ஆசிரியர்களின் மொபைலில் மின்னம்பலம் பத்திரிகையை புக்மார்க் செய்து தந்தோம். அதன் பின்னர் ஆசிரியர்கள் தங்களது மாணவிகளின் மொபைலில் கட்டாயம் புக்மார்க் செய்து தருகிறோம் என்று உறுதிபட கூறியதுடன், எப்படி மொபைலில் புக்மார்க் செய்வது என்பது குறித்தும் தெரிந்துகொண்டு சென்றனர்.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

மீனவப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: வடமாநில இளைஞர்கள் கைது!

6 நிமிட வாசிப்பு

மீனவப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: வடமாநில இளைஞர்கள் கைது!

100 நாள் அட்டைக்கு லஞ்சம்: யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம ...

3 நிமிட வாசிப்பு

100 நாள் அட்டைக்கு லஞ்சம்: யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்!

புதன் 31 ஜன 2018