மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 31 ஜன 2018

பியூட்டி ப்ரியா

பியூட்டி ப்ரியா

சிலருக்கு முகத்தில் அடிக்கடி வியர்த்துக்கொட்டி முகம் டல்லாக இருக்கும். அவர்கள் கிர்ணிப்பழத் துண்டு ஒன்றை எடுத்து மசித்து முகத்தில் பூசி கழுவினால் முகம் பளிச்சென்று இருக்கும்.

இரண்டு தேக்கரண்டி வெள்ளரி ஜூஸூடன், இரண்டு தேக்கரண்டி கிர்ணிப்பழ விழுதைச் சேர்த்து, 4 (அ) 5 துளி எலுமிச்சைச் சாறு கலந்து ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி நன்றாகக் குலுக்கி ஃப்ரிட்ஜில் வைத்து, எங்காவது வெளியில் போகும்போது இதை இயற்கை சென்ட் ஆகப் பயன்படுத்தலாம். 2 முதல் 3 மாதங்கள் வரை கெடாது. தோலையும் சேதப்படுத்தாது. விருப்பப்பட்டால் பன்னீர் சேர்த்துக் கொள்ளலாம்.

சிலருக்கு கை, கால், முகத்தில் தேவையில்லாத முடிகள் முளைக்கும், இதற்கு கிர்ணிப்பழ விதை பவுடர், ஓட்ஸ் பவுடர், கோரைக்கிழங்கு பவுடர், ஆவாரம்பூ பவுடர் தலா 100 கிராம் எடுத்து விழுதாக அரைத்துத் தேய்த்துக் குளித்து வர முகத்தில் உள்ள முடியை வலுவிழக்கச் செய்து தோலை மிருதுவாக்கும். ஆவாரம் பூ சருமத்துக்கு நல்ல நிறத்தைக் கொடுக்கும்.

வயோதிகத்தின் அறிகுறி கண்களில்தான் முதலில் தெரியும். இதற்கு பால் பவுடர், கிர்ணிப்பழ விதை பவுடர் இரண்டையும் சம அளவு எடுத்து, தண்ணீரில் கலந்து கண்களைச் சுற்றிலும் பூசி, ஐந்து நிமிடங்கள் கழித்துக் கழுவ வேண்டும். சுருக்கங்கள், தொய்வு, கருவளையம், சோர்வு நீங்கி, கண்கள் பிரகாசிக்கும்.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

புதன் 31 ஜன 2018