தரமற்ற பருத்தி: உயரும் நூல் விலை!


கடந்த ஒன்றரை மாதங்களில் 355 கிலோ அடங்கிய ஒரு மூட்டை பருத்தியின் விலை ரூ.39,000லிருந்து ரூ.43,200 ஆக உயர்ந்துள்ளது. இதைத் தொடர்ந்து பிப்ரவரி 1ஆம் தேதி முதல் நூல் விலையும் உயரும் என ஜவுளித் தொழில் துறையினர் தெரிவித்துள்ளனர்.
நடப்பு பருவ ஆண்டில் கனமழை மற்றும் பூச்சித் தாக்குதல் காரணமாக பருத்தியின் வரத்து அதிகரித்தும் தரம் குறைந்துள்ளது. இதனால் பருத்திக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டு விலை அதிகரித்துள்ளது. பருத்தி வரத்து அதிகமாக இருக்கும்போதே விலை உயர்ந்துள்ளதால் வரும் மார்ச் மாதத்தில் வரத்து குறையும்போது அதன் விலை இன்னும் உயரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.