ஹெல்த் ஹேமா: வாழவைக்கும் வெங்காயம்!


உணவில் வெங்காயம், பூண்டு ஆகிய இரண்டையும் சேர்த்து சாப்பிட்டால் அது கொலஸ்ட்ராலைக் குறைத்து ரத்த அழுத்தம், இருமல், ஆஸ்துமா, காய்ச்சல், மஞ்சள் காமாலை ஆகிய நோய்களைக் குணமாக்கும்.
இதயநோய் உள்ளவர்கள் சின்ன வெங்காயத்தை உணவில் அதிகம் சேர்த்துக்கொண்டால், ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படுத்தும் கொழுப்புகளைக் கரைக்கும்.
வெங்காயத்தை தயிர், மோர், நெய் போன்ற மற்ற உணவுப் பொருள்களோடு சேர்த்துச் சாப்பிடும்போது, உடல் குளிர்ச்சியை ஏற்படுத்தும்.
வெங்காயத்தை அடிக்கடி சாப்பிட்டு வருவதால், அது சிறுநீரகக் கற்களை எளிதில் கரைக்க உதவுகிறது.
வெங்காயத்தையும், கடுகு எண்ணெயையும் சேர்த்து மூட்டுவலி உள்ள இடத்தில் தடவினால் மூட்டுவலி குறையும்.
வெங்காயச் சாற்றில் தேன் கலந்து சாப்பிட்டால், இருமல், நுரையீரல் அழற்சி, மூக்கு எரிச்சல் போன்ற பிரச்னைகள் நீங்கும்.
புகைபிடித்தல், காற்று மாசுபடுதல், மன இறுக்கம் போன்றவற்றால் ஏற்படும் செல் இறப்பு மற்றும் சிதைவுகளை வெங்காயம் சரி செய்கிறது.
வெங்காயத்தை வதக்கிச் சாப்பிட்டுவந்தால், உஷ்ணத்தால் ஏற்படும் ஆசனக் கடுப்பு நீங்கும்.
வெங்காயச் சாற்றை மோரில் கலந்து குடித்துவந்தால், வயிற்றுக் கோளாறுகள் மற்றும் இருமல் பிரச்னைகள் நீங்கும்.
புற்றுநோயைத் தடுக்கும் மருந்து பொருள் வெங்காயத்தில் இருப்பதாக சமீபத்திய ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புகைபிடித்தல், காற்று மாசுபடுதல், மன இறுக்கம் போன்றவற்றால் ஏற்படும் செல் இறப்புகள், செல் சிதைவுகளை இது சரிசெய்து விடுகிறது.
நாலைந்து வெங்காயத்தைத் தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்து சாப்பிட பித்தம் குறையும், பித்த ஏப்பம் மறையும்.
வெங்காயச் சாறு சில வயிற்றுக் கோளாறுகளை நீக்கும். இதை மோரில் கலந்து குடிக்க இருமல் குறையும்.
வெங்காயச் சாற்றையும், வெந்நீரையும் கலந்து வாய் கொப்பளித்து, வெறும் வெங்காயச் சாற்றை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவி வர பல்வலி, ஈறுவலி குறையும்.