மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 31 ஜன 2018

காலியாக இருக்கும் பணியிடங்களை நீக்க முடிவு!

காலியாக இருக்கும் பணியிடங்களை நீக்க முடிவு!

கடந்த ஐந்தாண்டுகளாக நிரப்பப்படாமல் காலியாக இருக்கும் பணியிடங்களை நீக்கம் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

நாடு முழுவதும் பல்வேறு அரசுத் துறைகள் இயங்கிவருகின்றன. அவற்றில் உள்ள காலி பணியிடங்களால் ஒழுங்கான முறையில் செயல்பாடுகள் நடைபெறுவது இல்லை.

இந்த நிலையில், இதுகுறித்து மத்திய நிதி அமைச்சகம் சார்பில் அனைத்து துறைகளுக்கும் ஜனவரி 18ஆம் தேதி ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. அதில், ஐந்தாண்டுகளுக்கு மேலாக நிரப்பப்படாமல் இருக்கும் பணியிடங்களை நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு காலியாக இருக்கும் பணியிடங்களைக் கண்டறிந்து நீக்குவது குறித்து அமைச்சகங்கள், துறைகளின் நிதி ஆலோசகர்கள், நிர்வாகச் செயலாளர்கள் விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

புதன் 31 ஜன 2018