மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 31 ஜன 2018

கார்த்தி படப்பிடிப்பில் சூர்யா சர்ப்ரைஸ் விசிட்!

கார்த்தி படப்பிடிப்பில் சூர்யா சர்ப்ரைஸ் விசிட்!

நடிகர் கார்த்தியின் படப்பிடிப்புத் தளத்துக்கு நடிகரும் கார்த்தியின் அண்ணனுமான சூர்யா விசிட் அடித்திருக்கிறார்.

தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் பாண்டிராஜுடன் கூட்டணி அமைத்திருக்கிறார் கார்த்தி. இதில் கார்த்திக்கு ஜோடியாக சாயீஷா, ப்ரியா பவானி ஷங்கர், அர்த்தனா ஆகியோர் நடிக்கின்றனர். கிராமத்துக் கதைக்களத்தைக் கொண்ட இது, விவசாயத்தை முன்னிறுத்தும் படமாக உருவாகி வருகிறது. தமிழில் ‘கடைக்குட்டி சிங்கம்’ என்ற பெயரிலும் தெலுங்கில் ‘சின்னபாபு’ என்ற பெயரிலும் உருவாக இருக்கிறது.

இந்தப் படத்தை சூர்யா தனது 2டி என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் சார்பில் தயாரித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு தற்போது காரைக்குடியில் நடைபெற்று வருகிறது. ரேக்ளா ரேஸ் சம்பந்தமான காட்சிகள் கடந்த மூன்று நாள்களாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று (ஜனவரி 30) படப்பிடிப்புத் தளத்துக்கு சூர்யா சர்ப்ரைஸ் விசிட் அடித்திருக்கிறார். அங்கு படக் குழுவினரோடு கலந்துரையாடல் மேற்கொண்டதோடு புகைப்படமும் எடுத்துள்ளார்.

மேலும் ரேக்ளா ரேஸ் நடைபெறும் காட்சிகளை தனது மகன் தேவ்வுடன் இணைந்து பார்த்திருக்கிறார். அது குறித்தான தகவலை சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதுடன் ரேக்ளா ரேஸ் சம்பந்தமான புகைப்படங்களையும் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

டி.இமான் இசையமைக்கும் இதற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். காரைக்குடியில் இதன் படப்பிடிப்பு முடிந்ததும் கார்த்தி உள்ளிட்ட படக்குழுவினர் அடுத்தகட்ட படப்பிடிப்புக்காக திருநெல்வேலி செல்லவிருக்கின்றனர். சித்திரை மாதத்தில் படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.

மோசமான டிரைவிங் நகரங்கள்: எந்த இடத்தில் சென்னை?

3 நிமிட வாசிப்பு

மோசமான டிரைவிங் நகரங்கள்: எந்த இடத்தில் சென்னை?

வேலைவாய்ப்பு : அறநிலையத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : அறநிலையத் துறையில் பணி!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் - ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

3 நிமிட வாசிப்பு

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் - ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

புதன் 31 ஜன 2018