மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 31 ஜன 2018

ஐபோனில் எடுக்கப்பட்ட முழுப்படம்!

ஐபோனில் எடுக்கப்பட்ட முழுப்படம்!

டெக்னாலஜியின் வளர்ச்சி எல்லாத் துறைகளையும் ஆட்கொண்டிருக்க, அதிக பண முதலீட்டுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் திரையுலகம் மட்டும் விதிவிலக்காக இருக்க முடியாதுதான். பெருமளவில் பணத்தைச் செலவு செய்து, பல்வேறு பிரமாண்டங்களை மக்கள் கண்முன் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறது டெக்னாலஜி என்பதையும் மறுக்க முடியாது. ஆனால், அதே டெக்னாலஜியை வைத்து குறைந்த முதலீட்டுடன் படமெடுக்க முடியுமென நிரூபித்திருக்கிறார் மாற்று சினிமா உலகில் முக்கியமானவரான ஸ்டீஃபன் சோதர்பெர்க்.

ஸ்டீவனின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘UNSANE’ திரைப்படம் முழுக்க முழுக்க ஐஃபோனில் மட்டுமே படமாக்கப்பட்டிருக்கிறது. இதை சொல்லாமல் இருந்திருந்தால், வழக்கமான ஒரு சினிமாவைப் போல கடந்துபோகக்கூடிய அளவுக்கு, ஒளிப்பதிவின் நேர்த்தியுடன் இந்தப் படம் உருவாக்கியிருக்கிறது. முறிந்துபோன காதல் உறவின் அழுத்தத்தினால், இடம்பெயர்ந்து வேறு நகரத்தில், புதியதொரு வாழ்க்கையைத் தொடங்கும் கதாநாயகி, அவளது நினைவுகளினால் துரத்தப்படுகிறாள். தன்னையே நம்பாத ஒருவளுக்கு இந்த உலகம் என்ன கொடுக்கும் என்பதை தத்ரூபமான காட்சிகளினால் படமாக்கியிருக்கின்றனர்.

இயற்கையின் ஒளியைச் சரியான நேரத்தில் பயன்படுத்திப் படமெடுப்பதும், இருளை சரியான விகிதத்தில் செயற்கை விளக்குகளால் கிழித்து தேவையான சப்ஜெக்டின் மீது மட்டுமே கவனம் செலுத்தி படமாக்கியிருப்பது ட்ரெய்லரிலேயே தெரிகிறது. சுயாதீன திரைப்பட இயக்குநராக தன்னை திரையுலக வரலாற்றில் பதிவு செய்துகொண்ட ஸ்டீவன் சோதர்பெர்க் அவர்களின் மற்றுமொரு மைல்கல் இந்தத் திரைப்படம்.

UNSANE ட்ரெய்லர்

மோசமான டிரைவிங் நகரங்கள்: எந்த இடத்தில் சென்னை?

3 நிமிட வாசிப்பு

மோசமான டிரைவிங் நகரங்கள்: எந்த இடத்தில் சென்னை?

வேலைவாய்ப்பு : அறநிலையத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : அறநிலையத் துறையில் பணி!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் - ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

3 நிமிட வாசிப்பு

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் - ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

புதன் 31 ஜன 2018