மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 31 ஜன 2018

ஆண்கள் கால்பந்து: பெண்கள் பார்க்க தடை!

ஆண்கள் கால்பந்து: பெண்கள் பார்க்க தடை!

உத்தரப்பிரதேசத்தில் ஆண்கள் கால்பந்து விளையாடுவதைப் பெண்கள் பார்க்கக் கூடாது என தரூல் உலூம் மதகுரு உத்தரவிட்டுள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலம், சஹரான்பூர் மாவட்டத்தில், தியோபந்த் நகரில் ஆசியாவில் மிகப் பெரிய தரூல் உலூம் சன்னி முஸ்ஸிம் அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு மாணவர்களுக்கும், மக்களுக்கும் உருது, அரபி, புனித குர்ஆன் கற்றுக்கொடுத்து வருகிறது.

இந்த அமைப்பின் மூத்த மதகுரு முப்தி அத்தர் கஸ்மி முஸ்லிம் பெண்களுக்கு நேற்று முன்தினம் (ஜனவரி 29) உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளார். அதில், “ஆண்கள் முழங்காலுக்கு மேல் ஆடை அணிந்து கால்பந்து விளையாடுவதை முஸ்லிம் பெண்கள் பார்க்க மதத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது. தங்கள் மனைவியைக் கால்பந்து பார்ப்பதை ஆண்கள் எப்படி அனுமதிக்கிறார்கள்? வீரர்கள் விளையாடுவதைப் பெண்கள் பார்த்தால், வீரர்களால் சிறப்பாக செயல்பட முடியாது”எனத் தெரிவித்துள்ளார்.

2017 அக்டோபர் மாதம், முஸ்லிம் பெண்கள் புருவத்தைத் திருத்துவதற்கும், முடியை வெட்டுவதற்கும், அழகு நிலையம் செல்வதற்கும், இறுக்கமான ஆடை, கவர்ச்சியான புர்கா மற்றும் மேற்கத்திய ஆடை அணிவதற்கும் தடை விதிக்கப்பட்டது. அத்தகைய செயல்கள் ஆண்களை ஈர்க்கும். அது இஸ்லாமுக்கு எதிரானது எனக் கூறப்பட்டது. அதைத் தொடர்ந்து, ஜனவரி 1ஆம் தேதி ஜமியா நிஜாமியாவின் தலைமை முஃப்தி முகம்மது அஜிமுதீன் முஸ்லிம்கள் இறால் சாப்பிட தடை விதித்தார்.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

புதன் 31 ஜன 2018