தரம் சார்ந்த செயல்திறன் பகுப்பாய்வு!

அரசு ஊழியர்களின் செயல்திறனைத் தர அடிப்படையில் பகுப்பாய்வு செய்யத் திட்டமிட்டுள்ளதாக மகாராஷ்டிர மாநில அரசு அறிவித்துள்ளது. இத்திட்டம் 2018ஆம் நிதியாண்டில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த 7.5 லட்சம் அரசு ஊழியர்களின் செயல்திறனை தர அடிப்படையில் பகுப்பாய்வு செய்ய அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது. இத்திட்டத்தின்படி அரசு ஊழியர்கள் அனைவரும் பொது நிர்வாகத் துறையினால் 100 செயல்திறன் குறியீட்டு ஆய்வுக்குட்படுத்தப்படுவர். ஊழியர்களின் அந்த ஆண்டுக்கான அகநிலை மற்றும் புறநிலை தகுதி அடிப்படையிலேயே ஆய்வு அமையும். இப்புதிய பகுப்பாய்வு மூலம் தேர்ச்சி பெற்ற ஊழியர்கள் அங்கீகாரமும், வெகுமதியும் தந்து கவுரவிக்கப்படுவார்கள். அதேநேரம் தேர்ச்சி பெறாத ஊழியர்கள் நீக்கப்பட மாட்டார்கள்.