மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 30 ஜன 2018

மாணவர்கள் மீது தடியடி!

மாணவர்கள் மீது தடியடி!

தமிழக அரசின் பேருந்துக் கட்டண உயர்வைக் கண்டித்து வேலூர் மாவட்டம் ஓட்டேரியில் கல்லூரி மாணவ, மாணவிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டபோது, காவல் துறையினர் தடியடி நடத்தியதில் மாணவர்கள் பலர் காயமடைந்தனர்.

தமிழக அரசு ஜனவரி 20ஆம் தேதி முதல் பேருந்துக் கட்டணத்தை உயர்த்தியுள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் பெருமளவில் பாதிக்கப்படுவதால் கடந்த 22ஆம் தேதி முதல் கல்லூரி மாணவ, மாணவிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகிறார்கள்.

இந்நிலையில் இன்று (ஜனவரி 30) பேருந்துக் கட்டண உயர்வால் ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்படுவதாகக் கூறி ஓட்டேரியில் முத்துரங்கம் அரசு கல்லூரி மாணவ, மாணவிகள் வகுப்புகளைப் புறக்கணித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் ஓட்டேரி-ஆரணி சாலையில் சாலை மறியலில் ஈடுபட்ட மாணவர்கள் தமிழக அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். மாணவர்களின் இந்த சாலை மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு வந்த காவல் துறையினர் மாணவர்களை அப்புறப்படுத்த முயன்றனர். அப்போது காவல் துறையினருக்கும், மாணவர்களுக்குமிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து காவல் துறையினர் மாணவர்கள் மீது தடியடி நடத்தினார்கள். பின்பு அங்குள்ள கடைகளில் இருந்த பதாகைகளையும் காவல் துறையினர் தூக்கி வீசினர். காவல் துறையினரின் திடீர் தாக்குதலால் சிதறியோடிய மாணவர்கள் பலர் காயமடைந்தார்கள். கல்லூரி மாணவர்கள் மீது காவல் துறையினர் தடியடி நடத்தியதால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவியது.

இந்நிலையில் மாணவர் மீதான காவல் துறையின் தடியடிக்கு திமுக, மார்க்சிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் குறிப்பில், “பேருந்துக் கட்டண உயர்வை எதிர்த்து வேலூரில் போராடிய மாணவர்கள் மீது காவல் துறை தடியடி நடத்தியிருப்பதைக் கடுமையாகக் கண்டிக்கிறேன். மாணவர்கள் மீதான அடக்குமுறையைக் கைவிட்டு, கட்டண உயர்வை உடனே திரும்பப் பெறுவதோடு, மாணவர்கள் மீதான வழக்குகளை ‘குதிரை பேர’ அரசு ரத்து செய்ய வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

மாணவர்கள் மீதான காவல் துறையின் தாக்குதலைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயற்குழுக் கூட்டத்தில் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இன்று (ஜனவரி 30) நடந்த மார்க்சிஸ்ட் மாநில செயற்குழுவில், “மாணவர்களின் நியாயமான கோரிக்கைக்கு செவி சாய்க்க மறுக்கும் அரசு, வன்முறையின் துணையோடு போராட்டத்தை ஒடுக்க முயற்சிக்கிறது. வேலூரில் போராடிவந்த மாணவர்கள் மீது காவல் துறை தடியடி நடத்தியிருப்பது வன்மையான கண்டனத்திற்குரியதாகும்.

அதே போல, மதுரை தியாகராயர் கல்லூரி மாணவர்கள் உள்பட பல மாணவர்கள் மீது வழக்கு போடப்பட்டுள்ளதுடன், இந்திய மாணவர் சங்க மாவட்டத் தலைவர் வேல், தேவா உட்பட 17 பேர் மீது வழக்கு போடப்பட்டு, 10 பேர் ஜாமீனில் வரமுடியாத வகையில் சிறையிலடைக்கப்பட்டுள்ளனர். மாநில அரசின் இந்த அடக்குமுறை நடவடிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.

மோசமான டிரைவிங் நகரங்கள்: எந்த இடத்தில் சென்னை?

3 நிமிட வாசிப்பு

மோசமான டிரைவிங் நகரங்கள்: எந்த இடத்தில் சென்னை?

வேலைவாய்ப்பு : அறநிலையத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : அறநிலையத் துறையில் பணி!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் - ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

3 நிமிட வாசிப்பு

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் - ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

செவ்வாய் 30 ஜன 2018