ராணுவச் சீருடை ஆலையை மூட முடிவு!


சென்னையில் ராணுவ வீரர்களுக்கான சீருடை தயாரிக்கும் ஆலையை மூட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
சென்னை ஆவடியில், 1961ஆம் ஆண்டு முதல் ராணுவச் சீருடை ஆலை இயங்கிவருகிறது. இங்கு ராணுவ வீரர்கள் பயன்படுத்தும் சீருடைகள், சுவட்டர் போன்ற ஆடைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இங்கு, சுமார் 2200 பேர் பணியாற்றி வருகின்றனர். இங்கு தயாரிக்கப்படும் சீருடைகள் நாடு முழுவதும் அனுப்பப்பட்டுவருகிறது. இந்நிலையில், இந்த ஆலையை மூட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதனால், 2200 பேரின் வேலை பறிபோகும் அபாயம் உள்ளது.
தமிழகத்தில் மத்திய அரசின் நிறுவனங்கள் தொடர்ந்து மூடப்பட்டுவருகிறது. அதில் வேளாண்மை ஆராய்ச்சி நிலையங்கள், கோவை கரும்பு ஆராய்ச்சி நிறுவனம், திருச்சி வாழை ஆராய்ச்சி நிறுவனம், அச்சகங்கள், மீன் ஆராய்ச்சி நிறுவனங்கள் ஆகியவை அடங்கும். இதற்கு தமிழக மக்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மேலும் அரசியல் கட்சிகளும் கடும் கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.