மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 30 ஜன 2018

அரசு தேர்வுகளை ஏன் ஆய்வு செய்யக்கூடாது?

அரசு தேர்வுகளை ஏன் ஆய்வு செய்யக்கூடாது?

2014 ஆம் ஆண்டுக்கு பின்னர் நடைபெற்ற அனைத்து அரசுத் தேர்வுகளையும் ஏன் ஆய்வு செய்யக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. .

கடந்த சில ஆண்டுகளாகத் தமிழக அரசு பணிக்கான போட்டித் தேர்வுகளில் முறைகேடுகள் நடப்பதாகக் குற்றச்சாட்டு எழுவதும், அவை ரத்து செய்யப்படுவதும் தொடர்கதையாகி வருகிறது. சமீபத்தில் பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு மதிப்பெண் முறைகேடு நடைபெற்று சர்ச்சையை ஏற்புடுத்தி வருகிறது. இதுமட்டுமல்லாமல் இந்த தேர்வில் தமிழ்நாடு அல்லாத பிற மாநிலங்களை சேர்ந்த தமிழே தெரியாதவர்கலெல்லாம் வெற்றிப் பெற்றதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது

தமிழ்நாடு அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் 1058 பணியிடங்களை நிரப்புவதற்கு செப்டம்பர் மாதம் எழுத்துத்தேர்வு நடைபெற்றுத் தேர்வு முடிவுகள் நவம்பர் 7 அன்று வெளியிடப்பட்டது. ஒரு லட்சத்து 33 ஆயிரம் பேர் எழுதிய தேர்வில் 2200 பேர் தேர்ச்சி பெற்றனர்.

இந்தத் தேர்வு முடிவில் முதலில் வெளியிட்ட மதிப்பெண்களுக்கும், ஓ.எம்.ஆர். விடைத்தாள் நகலில் உள்ள மதிப்பெண்களுக்கும் 60 முதல் 80 மதிப்பெண்கள் வரை வித்தியாசம் இருந்ததாகப் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து தேர்வு முடிவை ரத்து செய்து ஆசிரியர் தேர்வு ஆணையம் உத்தரவிட்டது.

இந்த விவகாரம் தொடர்பாக 150க்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து மத்திய குற்றப் பிரிவு போலீசார் முறைகேட்டில் ஈடுபட்டவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மதிப்பெண்களைப் பதிவிடும் பணியை மேற்கொண்ட நொய்டா, தனியார் டேட்டா என்ட்ரி நிறுவனத்தின் பொறியாளர் ஷேக்தாவூத் நாசரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

இதனிடையே டி.என்.பி.எஸ்.சி, டி.ஆர்.பி. உள்ளிட்ட போட்டித் தேர்வுகளில் நடைபெறும் முறைகேடுகள் குறித்தும், பணம் கொடுத்து தேர்வில் வெற்றி பெறுவோர் குறித்தும் தொடர்ந்து ஊடங்கங்களில் செய்தி வெளியானது.

இதுதொடர்பாக, உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது. நீதிமன்ற பதிவாளர் தாக்கல் செய்த மனுவில், போட்டித் தேர்வுகளை முறைப்படுத்த வேண்டும் என்றும், தேர்வு முறைகேடுகள் குறித்து சிறப்புக்குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

இந்த மனு இன்று (ஜனவரி 30) நீதிபதிகள் கிருபாகரன், தாரணி ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது பணம் கொடுத்து பணியில் சேர்ந்தால் எப்படி நேர்மையாகப் பணியாற்ற முடியும் என்று கேள்வி எழுப்பினர்.

மேலும் பாலிடெக்னிக் விரிவுரையாளர் மதிப்பெண் முறைகேடு குறித்து இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன ? என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள் கணினி மயமாகப்பட்ட பின்னர் நடைபெற்ற தேர்வுகள் அனைத்திலும் முறைகேடுகள் நடைபெற்றிருக்குமோ என்று சந்தேகம் எழுந்துள்ளது. எனவே 2014 ஆம் ஆண்டு முதல் நடைபெற்ற அரசு தேர்வுகள் குறித்து ஏன் ஆய்வு செய்யக்கூடாது என்றும் கேள்வி எழுப்பினர்.

இதுதொடர்பாக தலைமைச் செயலாளர், சி.பி.ஐ, ஆசிரியர் தேர்வு ஆணையம், காவல்துறையினர். மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் ஆகியோர் பிப்ரவரி 16ஆம் தேதி பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.

மோசமான டிரைவிங் நகரங்கள்: எந்த இடத்தில் சென்னை?

3 நிமிட வாசிப்பு

மோசமான டிரைவிங் நகரங்கள்: எந்த இடத்தில் சென்னை?

வேலைவாய்ப்பு : அறநிலையத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : அறநிலையத் துறையில் பணி!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் - ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

3 நிமிட வாசிப்பு

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் - ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

செவ்வாய் 30 ஜன 2018