மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 30 ஜன 2018

சீரகம்: அதிக உற்பத்தியால் விலை உயருமா?

சீரகம்: அதிக உற்பத்தியால் விலை உயருமா?

நடப்பாண்டில் சீரகம் மற்றும் தனியாவின் விலைகளில் மாறுபட்ட போக்கு இருந்து வருகிறது. சென்ற ஆண்டில் சீரகத்தின் விலை உயர்வினால் அதிக மகிழ்ச்சியடைந்த விவசாயிகள் தற்போது சீரகம் உற்பத்தியில் அதிகக் கவனம் செலுத்தி வருகின்றனர்.

இதுகுறித்து குஜராத் மாநிலம் அகமதாபாத் வேளாண் சந்தைக் குழுவின் முன்னாள் தலைவர் அரவிந்த் படேல் பிசினஸ்லைன் ஊடகத்திடம் கூறுகையில், “பொதுவாக உள்ளூர் சந்தைகளில் சீரகத்தின் விலை கிலோ ஒன்றுக்கு ரூ.175 ஆகவும், தேசிய சந்தையில் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.16,500 ஆகவும் விற்கப்படுகிறது. சென்ற ஆண்டில் சீரகம் கிலோ ஒன்றுக்கு ரூ.180 ஆகவும், தனியா ரூ.45 ஆகவும் இருந்தது. அதிக விலைக்கு சீரகம் விற்கப்படுவதால் விவசாயிகள் அவற்றை அதிகம் பயிரிடுகின்றனர். இதன் விளைவாக சீரகம் விளைவிக்கும் ஏக்கரின் பரப்பளவு அதிகமானது. அதேநேரம் தனியா விதைப்பில் சரிவு ஏற்பட்டுள்ளது” என்று கூறினார்.

விதை மற்றும் தானிய பங்குதாரர் கூட்டமைப்பின் உறுப்பினர் அஷ்வின் நாயக் கூறுகையில், ”குஜராத்தில் சென்ற ஆண்டில் 2.75 லட்சம் டன்னாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட சீரக உற்பத்தி இந்த ஆண்டில் 4.12 லட்சம் டன்களாக அதிகரித்துள்ளது. முந்தைய ஆண்டில் 5500 டன் அளவிலான சீரகம் இருப்பில் இருந்தது. இதனுடன் தற்போதைய அதிக வரத்தும் சந்தையில் சீரகத்தின் விலையில் உடனடித் தாக்கத்தை ஏற்படுத்தி விடாது. வரத்து அதிகரிப்பால் ஏற்படும் விலையின் தாக்கம் பிப்ரவரி மாதத்திற்கு பிறகே தெரியும்” என்று தெரிவித்தார்.

மோசமான டிரைவிங் நகரங்கள்: எந்த இடத்தில் சென்னை?

3 நிமிட வாசிப்பு

மோசமான டிரைவிங் நகரங்கள்: எந்த இடத்தில் சென்னை?

வேலைவாய்ப்பு : அறநிலையத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : அறநிலையத் துறையில் பணி!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் - ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

3 நிமிட வாசிப்பு

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் - ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

செவ்வாய் 30 ஜன 2018