மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 30 ஜன 2018

நெடுஞ்சாலை மருத்துவமனைகளில் ‘ட்ரோமா கேர்’!

நெடுஞ்சாலை மருத்துவமனைகளில் ‘ட்ரோமா கேர்’!

நெடுஞ்சாலைகளில் உள்ள மருத்துவமனைகளில் ஒருங்கிணைந்த ‘ட்ரோமா கேர்’ எனும் விபத்து அவசர சிகிச்சை மையம் அமைக்க மத்திய சுகாதாரத் துறை கூடுதல் நிதியை ஒதுக்க திட்டமிட்டுள்ளது.

மத்திய அரசின் சுகாதாரத் துறை சார்பில் 12ஆவது ஐந்தாண்டு திட்டத்தில் ஒருங்கிணைந்த சிறப்பு விபத்து அவசர சிகிச்சை மையத்தை ஏற்படுத்த திட்டமிடப்பட்டது. அதன்படி, தேசிய மாநில நெடுஞ்சாலைகளின் அருகில் உள்ள மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைகள், மாவட்டத் தலைநகரங்கள் மற்றும் மண்டலத்தின் முக்கிய பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் இம்மையத்தை ஏற்படுத்த பணிகள் மேற்கொள்ளப்பட்ட உள்ளது.

மேற்கு மண்டலத்தில் கோவை மட்டுமின்றி, திருப்பூர், நீலகிரி மற்றும் ஈரோடு மாவட்டங்களில் சாலை விபத்துகளில் காயம் ஏற்பட்டு, அவசர சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்படுகின்றனர். கோவை அரசு மருத்துவமனைக்கு தினமும் 40 பேர் வரை சாலை விபத்தில் சிக்கி, சிகிச்சைக்காக வருகிறார்கள். இதன் அடிப்படையில், கூடுதல் நிதியைக் கொண்டு கோவை அரசு மருத்துவக் கல்லூரியில் இம்மையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மோசமான டிரைவிங் நகரங்கள்: எந்த இடத்தில் சென்னை?

3 நிமிட வாசிப்பு

மோசமான டிரைவிங் நகரங்கள்: எந்த இடத்தில் சென்னை?

வேலைவாய்ப்பு : அறநிலையத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : அறநிலையத் துறையில் பணி!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் - ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

3 நிமிட வாசிப்பு

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் - ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

செவ்வாய் 30 ஜன 2018