மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 30 ஜன 2018

திருப்பதியில் வெடிகுண்டு!

திருப்பதியில் வெடிகுண்டு!

திருப்பதி மலைப்பாதையில், வெடிகுண்டு பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பதி ஏழுமலையான தரிசிக்க நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருப்பதிக்கு வந்து செல்கின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் அலிபிரி மலைப்பாதை, ஸ்ரீவாரி மெட்டு மலைப்பாதையில் நடைப்பயணம் மேற்கொள்வது வழக்கம். திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு தீவிரவாதிகள் மூலம் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. எனவே, பாதுகாப்பு பணியில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். பக்தர்களும் கடும் சோதனைகளுக்கு பிறகே உள்ளே அனுப்பப்படுகின்றனர். கோயிலைச் சுற்றி குறிப்பிட்ட தூரத்துக்கு மேல் விமானங்கள் பறக்கவும் தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், நேற்றிரவு (ஜனவரி 28) திருப்பதியின் ஸ்ரீவாரி மெட்டு மலையடிவாரத்தில் செம்மரக்கட்டைகள் கடத்தல் தடுப்பு போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு ஒரு பை கிடந்தது. அந்தப் பையில், வெடிகுண்டு தயாரிக்க பயன்படுத்தப்படும் எலக்ட்ரானிக் பொருட்கள், வெடி மருந்துகள் இருந்தது. மேலும், அந்தப் பையில் திருச்சி ஸ்ரீரங்கம் முகவரியும்,கேரளா நகைக்கடை அட்டைப்பெட்டியும் இருந்தது. அதைத் தொடர்ந்து, அந்த முகவரியின் அடிப்படையில் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மலைப்பாதையில் வேறு எங்கும் வெடிப் பொருட்கள் உள்ளதா என்றும் போலீஸார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மேலும், திருப்பதிக்கு வரும் பக்தர்கள் கண்காணிப்புடன் இருக்குமாறு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

3 நிமிட வாசிப்பு

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

செவ்வாய் 30 ஜன 2018