மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 30 ஜன 2018

ஆட்டுத்தலை : ரஜினிக்கு எதிராக சரத்

ஆட்டுத்தலை : ரஜினிக்கு எதிராக சரத்

தமிழகத்தை ஆண்டவனாலேயே காப்பாற்ற முடியாது என்று சொல்லிவிட்டு அமெரிக்கா சென்றவர்தான் ரஜினிகாந்த் என்று சமக தலைவர் சரத்குமார் விமர்சனம் செய்துள்ளார்.

பேருந்துக் கட்டண உயர்வைக் கண்டித்து பல்வேறு கட்சிகளும், மாணவர்களும் போராட்டம் நடத்திய நிலையில், கட்டண உயர்வை சற்று குறைத்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. ஆனால் முழுமையாகத் திரும்பப் பெறக்கோரி நேற்று திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தேமுதிக சார்பிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்நிலையில் கட்டண உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி சமத்துவ மக்கள் கட்சி சார்பில் இன்று (ஜனவரி 30) தமிழகம் முழுவதும் பல இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் சமக தலைவர் சரத்குமார் கலந்துகொண்டார். ஆர்பாட்ட மேடைக்கு சிறிது தூரம் முன்பிருந்து சைக்கிளில் பயணம் செய்து தனது எதிர்ப்பையும் பதிவு செய்தார்.

ஆர்ப்பாட்டத்தில் பேசிய சரத்குமார் புதிய அரசியல் கட்சித் தொடங்கவுள்ள ரஜினிகாந்தை கடுமையாக விமர்சனம் செய்தார். "நானும் ஆன்மீகவாதிதான். நான் ரஜினி காட்டுவது போல பாபா முத்திரையைக் காட்ட மாட்டேன். அது ஆட்டுத் தலை போல உள்ளது. இதுகுறித்து ஏற்கனவே சீமான் கூறியுள்ளார். அது பாபாவின் முத்திரையல்ல, சீக்ரெட் சமூகத்தில் முத்திரை. தமிழகத்தை ஆண்டவனாலேயே காப்பாற்ற முடியாது என்று கூறிவிட்டு அமெரிக்காவுக்கு சென்றவர்தான் ரஜினிகாந்த்.

அன்று ஜெயலலிதா ஆட்சி அமைந்திருந்தால் உங்களை ஏதாவது செய்திருப்பார் என்று அமெரிக்காவுக்கு சென்றுவிட்டீர்கள். கலைஞர் ஆட்சி வந்த பிறகு வருகிறீர்கள். கலைஞர் அருகில் அன்று நான் அமர்ந்திருந்தேன். எனவே சந்தர்ப்பவாத அரசியல் செய்து மக்களை ஏமாற்ற வேண்டாம்" என்று குறிப்பிட்ட அவர், காவிரி விவகாரத்தில் ரஜினியின் நிலைப்பாடு என்ன என்பது குறித்தும் கேள்வி எழுப்பினார்.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

செவ்வாய் 30 ஜன 2018