மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 30 ஜன 2018

குறைந்த விலையில் அதிக வசதிகள்!

குறைந்த விலையில் அதிக வசதிகள்!

சியோமி நிறுவனம் 4GB RAM வசதியுடன் புதிய ஸ்மார்ட்போன் மாடல் ஒன்றினை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது.

சியோமி நிறுவனம் கடந்த சில வருடங்களாக மொபைல் விற்பனையில் முன்னேற்றம் கண்டு வருகிறது. குறைந்த விலையில் அதிக வசதிகளைக் கொண்டு வெளியாகும் இதன் மாடல்கள் பயனர்களின் கவனத்தை ஈர்த்துவந்துள்ளன. அதன் தொடர்ச்சியாகக் கடந்த ஆண்டு (2017) வெளியான ரெட்மி 5 என்ற மாடல் 2GB RAM வசதியுடன் வெளியாகியிருந்தது. அந்த மாடலில் அப்கிரேடு செய்து சியோமி நிறுவனம் தற்போது 4GB RAM வசதியுடன் வெளியிட்டுள்ளது.

இந்தப் புதிய மாடலானது 7.1.2 ஆன்ட்ராய்டு ஓ.எஸ் உடன், பேட்டரி சக்தி 3300mAh கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. 5.7 இஞ்ச் திரையளவு கொண்ட இந்த ஸ்மார்ட் போன் 32GB இன்டெர்னல் வசதியுடனும், ஸ்னேப்டிராகன் 450 கொண்டும் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி இந்த மாடலின் விலை ரூ.12,000 மட்டுமே என்பதால் இதற்கான வரவேற்பு அதிகரித்துள்ளது.

பின் இருக்கை நபருக்கும் ஹெல்மெட் கட்டாயம்!

3 நிமிட வாசிப்பு

பின் இருக்கை நபருக்கும் ஹெல்மெட் கட்டாயம்!

சிறப்புக் கட்டுரை: குழந்தை வளர்ப்பென்ன சவாலா?

15 நிமிட வாசிப்பு

சிறப்புக் கட்டுரை: குழந்தை வளர்ப்பென்ன சவாலா?

7000 போலி ஆதார் அட்டைகளை தயாரித்த நபர் கைது!

3 நிமிட வாசிப்பு

7000 போலி ஆதார் அட்டைகளை தயாரித்த நபர் கைது!

செவ்வாய் 30 ஜன 2018