மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 30 ஜன 2018

திமுக எழுப்பவுள்ள பிரச்னைகள்!

திமுக எழுப்பவுள்ள பிரச்னைகள்!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கூடியுள்ள நிலையில், திமுக சார்பில் எழுப்பப்படவுள்ள பிரச்னைகள் குறித்து கனிமொழி பேட்டியளித்துள்ளார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று குடியரசுத் தலைவரின் உரையுடன் ஆரம்பமானது. தொடர்ந்து வரும் பிப்ரவரி 1ஆம் தேதிக்கு கூட்டத் தொடர் ஒத்திவைக்கப்பட்டது. அன்றைய தினத்தில் நிதியமைச்சர் அருண் ஜெட்லி பட்ஜெட் தாக்கல் செய்யவுள்ளார். இந்நிலையில் பல்வேறு கட்சிகளும் தங்கள் மாநிலப் பிரச்னைகள் குறித்து மக்களவையிலும், மாநிலங்களவையில் எழுப்பத் திட்டமிட்டுள்ளனர்.

திமுக சார்பில் எழுப்பவுள்ள பிரச்னைகள் குறித்து திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி டெல்லியில் நேற்று (ஜனவரி 29) செய்தியாளர்களிடம் பேசினார்.

அவர், "நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் திமுகவைப் பொறுத்தவரை பல்வேறு பிரச்னைகளையும் எழுப்ப முடிவு செய்துள்ளோம். முக்கியமாக சிவகாசி பட்டாசு தொழிற்சாலைகள் எவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளன என்பது குறித்து பிரச்னை எழுப்ப அனுமதி கேட்டிருக்கிறோம். திருப்பூரிலுள்ள பின்னலாடை தொழிற்சாலைகள் ஜிஎஸ்டியால் சரிவிலிருந்து மீண்டு வர முடியாத நிலையில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன, இதைப் பற்றியும் பேசவுள்ளோம்.

ஓகி புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களை தேடுவதற்கான முயற்சிகள் சரியாக மேற்கொள்ளபடவில்லை. மேலும் அங்கு புயலால் பாதிக்கப்பட்டு ரப்பர், வாழை தோட்டங்கள் முற்றிலும் அழிந்துள்ளன. எனவே இந்த பிரச்னைகள் குறித்தும் பேசப்பட வேண்டும்" என்றார்.

பின் இருக்கை நபருக்கும் ஹெல்மெட் கட்டாயம்!

3 நிமிட வாசிப்பு

பின் இருக்கை நபருக்கும் ஹெல்மெட் கட்டாயம்!

சிறப்புக் கட்டுரை: குழந்தை வளர்ப்பென்ன சவாலா?

15 நிமிட வாசிப்பு

சிறப்புக் கட்டுரை: குழந்தை வளர்ப்பென்ன சவாலா?

7000 போலி ஆதார் அட்டைகளை தயாரித்த நபர் கைது!

3 நிமிட வாசிப்பு

7000 போலி ஆதார் அட்டைகளை தயாரித்த நபர் கைது!

செவ்வாய் 30 ஜன 2018