கடைசியா முகத்தைப் பாக்குறவங்க பாத்துக்கலாம் -அப்டேட் குமாரு

மத்திய அரசாங்கம் எதைப் பாராட்டுனாலும், போற்றினாலும், கொண்டாடினாலும் அதுக்கு எதிரா பேசுறதையே வழக்கமா வெச்சிருந்த மக்களுக்கு இன்னைக்கு என்ன பன்றதுன்னே தெரியல. காந்தியையும் கொண்டாடுறாங்க, கோட்சே ஃபோட்டோவுக்கும் மாலை போடுறாங்க. இந்தமாதிரி ஒரு கையறு நிலைக்கு யாருமே ஆளாகக்கூடாது. ஏன்யா இப்படி நாதாரித்தனம் பண்றீங்கன்னு கேட்டா, ஒரு குற்றவாளிக்காக அழுது தீர்த்த மாநிலம் தான நீங்க, இன்னைக்கு அதே குற்றவாளிக்கு அண்ணா, எம்.ஜி.ஆர் போன்ற தலைவர்கள் இருக்கும் இடத்துல சமாதி கட்டுறதை கேள்வி கேக்க வக்கில்லையே உங்களுக்கு, நாளைக்கே சிலையும் வைப்பாங்களே அன்னைக்கு என்ன பண்ணுவீங்கன்னு ஒரு ஆர்.எஸ்.எஸ் தொண்டர் கேட்டாரு. இவர்ட்ட திரும்ப கேக்க ஆயிரம் கேள்வி இருந்தாலும், அவர் கேள்விக்கு பதில் இல்லாததால ‘மல நல்லாருக்கியா மல’ அப்படின்னு கேட்டுட்டு வந்துட்டேன். அனைத்து ராஜதந்திரங்களும் வீணாகிவிட்டதே அமைச்சரே... நீங்க அப்டேட்டைப் படிங்க, கடைசியா ஒருதரம் எம்.ஜி.ஆர். சமாதில காது வெச்சு அவர் வாட்ச் சவுண்டை கேட்டுட்டு வந்துடுறேன்.
Parani Krishnarajani
'ஆன்மீக அரசியலினால்' காந்தி பலியெடுக்கப்பட்ட நாள்.
தீரன் மகேந்திரன்.
அடேய்.. கூறுகெட்ட பக்தாஸ்.. பத்மாவதிக்கும் , பாகமதிக்கும் தான் வித்தியாசம் தெரியல... தீபிகா படுகோனுக்கும்.. அனுஷ்காவுக்குமாடா வித்தியாசம் தெரியல.... உங்கள எல்லாம் வச்சி எப்படி டிஜிட்டல் இந்தியாவ உருவாக்கி....வல்லரசாக்கி...
Mano Bharathi
சென்னைக்கு போன நம்ம பையன் கம்பெனிலாம் ஆரம்பிச்சுட்டான். ஊர்ல படிச்சிட்டு வேலை இல்லாம இருக்க அவங்க Friend-ஓட பையனுக்கு ஒரு நல்ல வேலையா வாங்கி குடுப்பான்னு நம்ம Parents நம்புறாங்கல... அது பேர் தான் வளர்ச்சி...
Thirumavelan Padikaramu
வகுப்புவாத துப்பாக்கியால் காந்தி கொல்லப்பட்ட நாள் ஜனவரி 30. இப்படி நடக்கும் என்று அவருக்கு ஆறு மாதங்களுக்கு முன்பே தெரியும். 'இனியும் நீ சாகாமல் ஏன் இருக்க வேண்டும்?' என்று தன்னைத்தானே கேட்டுக் கொண்டார்.
ஜனவரி 16: இங்கு சமாதானம் நிலவாவிட்டால் நான் சாக வேண்டும்
ஜனவரி 17: நாம் கோரமான அபாயத்தை நோக்கி தலைகுப்புற சென்றுகொண்டிருக்கிறோம்.
ஜனவரி 18: என் கண்களையும் காதுகளையும் நான் இன்னும் இழந்துவிடவில்லை.
ஜனவரி 20: நான் நேசித்துப் போற்றும் மதத்தைப் பாதுகாப்பதற்கு கடவுள் என்னை ஒரு கருவியாக ஆக்குவார் என நம்புகிறேன்( அன்றுதான் பிரார்த்தனை நேரத்தில் குண்டு வீசப்பட்டது)
ஜனவரி 29: இந்தக் கொந்தளிப்பான நேரத்தில் எனக்கு வேண்டியது அமைதி.
ஜனவரி 30: பிரார்த்தனைக்குப் பிறகு பார்ப்பதாக அவர்களிடம் சொல்லுங்கள். நான் உயிருடன் இருந்தால் பிரார்த்தனை முடிந்தபின் அவர்களைப் பார்க்கிறேன்.
சொல்லி பத்தாவது நிமிடத்தில்
Krishi Krishi
தொடர்ந்து தட்டிக் கொண்டே இரு
உள்ளிருக்கும் ஆனந்தம்
என்றேனும் சாளரத்தைத் திறந்து
எட்டிப் பார்க்கும்
யார் வந்திருக்கிறார்கள் என
-ஜலாலுத்தின் ரூமி
தமிழில்: என்.ச்த்திய மூர்த்தி.
Surya Xavier
என் பையன் ரெம்ப நல்லவன் சார்.
வாயத் தொறக்கவே மாட்டான்.
அதிர்ந்து பேசமாட்டான்.
அக்கம் பக்கத்துல என்ன நடக்குதுன்னே அவனுக்கு தெரியாது.
தான் உண்டு
தன் வேலையுண்டுன்னு இருப்பான்.
வெளி உலகமே அவனுக்கு தெரியாது.
வீட்டுல அவன் தான் ரெம்ப காம் டைப்.
ஓகோ
புள்ளையப் பெறச் சொன்னா
பொணத்த ஏய்யா பெத்து வச்சுருக்க?
Richard Elumalai
மனிதர்களைத் தவிர பிற உயிர்கள் அனைத்துமே தேவைக்காக மட்டுமே வாழ்கின்றன.
ஆனால் மனிதன்.?
Feroz Khan
கொலைகாரனின் படம் நாடாளுமன்றத்தில், கொன்றவர்களே கொலை செய்யப்பட்டவருக்கு மலர் அஞ்சலி! ஜனவரி30முரண்பாடு
Raja Julie
கூடவே இருந்து கொல்லும் கேன்சரை விட கொடியது..
நம்பிக்கை துரோகம்..!
மித்ரன்
பேருந்து கட்டண உயர்வுக்கு யார் காரணம் என மக்களுக்கு தெரியும் - ஓ.பி.எஸ்
கருப்பன் குசும்புகாரன் எல்லாத்துக்கும் எடப்பாடி தான் காரணம்ன்னு மறைமுகமா சொல்றான்..
யாத்ரீகன்
இன்சென்டிவ் எப்போ கிடைக்கும் என்று கேட்ட பிறகு தான் நம் குறைகளை பட்டியல் போடுகிறார்கள் அலுவலகத்தில்.
குறைகளை பொறுத்துக் கொண்டு இத்தனை நாள் படியளந்திருக்கிறார்களோ!
இந்த முதலாளிகளுக்கு தான் எத்தனை பெரிய மனது
ஜேஜே
'தமிழால் இணைந்தோம்' என்பது டுவிட்டர் நட்பு வட்டத்துக்கு தான் அதிகமாக பொருந்துகிறது!
mohanram.ko
'அவள் வரவா' என்றாள்
அவள் வந்தபின்தான் தெரியும்,
'அவள் வரவா', செலவா என்று!
கிரியேட்டிவ் ЯΛJ
ஆதார் அட்டை இல்லாததால் கர்ப்பிணிக்கு சிகிச்சை மறுப்பு: உத்திர பிரதேசம் மருத்துவமனை வாசலிலேயே நிகழ்ந்த பிரசவம் - செய்தி
வயித்துல இருக்கிற குழந்தைக்குமா ஆதார் பிரச்சனை ,
சக்திமான்
57 வயதில் எட்டுப்பெண்களை திருமணம் செய்த முதியவர்!
இங்கிட்டு ஒன்னு பண்றதுக்கே வழிய காணாம், உனக்கு எட்டு கேக்குதா, போ தெய்வமே போ, கண்ட இடத்துல கட்டி வந்து செத்துராத..
எழில்விழி
அனைத்து வண்ணங்களையும் இணைக்கிறப்போது தான் வெண்மை கிடைக்கிறது.
அனைத்து மனங்களையும் இணைத்தால்??????
விடியலைதேடி
போதையில் மாடியிலிருந்து தற்கொலைக்கு முயன்றவர் சிறுமீது விழுந்து இருவரும் பலத்தகாயம்-செய்தி.
இதுதான் பழமொழி சொல்வாங்க, எங்கோ போற மாரியாத்தா, எம்மேலவந்து ஏறுதாத்தா!
மெத்த வீட்டான்
கோட்சே எனும் கொடியவன் வரலாற்றில் இடம்பெற காந்தி உதவிய நாள் இன்று...!
SHIVA SWAMY.P
சிரித்துக்கொண்டிருக்கும் முகத்திலிருந்துதான் அதிகமான சொற்களை திருடமுடியும்!!
கமலி
ஜாதகம்பாத்து கல்யாணம் பண்றவண Reject பண்றது நல்லது..Becoz பிரச்சன வந்துட்டா என் ஜாதகத்துல இன்னொரு Mrge பண்ணணும் நு இருக்கு கோவுச்சுக்காத Bye நு சொல்லிட்டு போய்டுவான்
கோழியின் கிறுக்கல்!!
எவ்வளவு சமத்துவம் பேசினாலும் ஒரு பெண் இரு சக்கர வாகனத்தில் முந்துவதை ஏற்றுக் கொள்வதில்லை பல ஆண்கள்!!
-லாக் ஆஃப்.