மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 30 ஜன 2018

மானிய ஸ்கூட்டி: ஆர்.டி.ஒ. அலுவலகத்தில் குவியும் பெண்கள்!

மானிய ஸ்கூட்டி: ஆர்.டி.ஒ. அலுவலகத்தில் குவியும் பெண்கள்!

தமிழகத்தில் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு மானிய விலையில் இருசக்கர வாகனம் வழங்கப்படும் என ஆளுங்கட்சி தேர்தல் வாக்குறுதி அளித்தது. வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் அதற்கான அறிவிப்பைத் தமிழக அரசு வெளியிட்டது. இதையடுத்து, ஓட்டுநர் உரிமம் வாங்க வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் குவியும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது.

வேலைக்குச் செல்லும் பெண்கள் இருசக்கர வாகனம் வாங்க 50 சதவிகிதம் மானியம் அல்லது ரூ.25 ஆயிரம் மானியம் வழங்கும் திட்டம் தமிழகம் முழுவதும் செயல்படுத்தப்பட்டுவருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெற, தமிழக அரசின் அம்மா இருசக்கர வாகனத் திட்ட விண்ணப்பப் படிவம் நகராட்சி, ஊராட்சி ஒன்றியம், பேரூராட்சிகளில் வழங்கப்பட்டுவருகிறது. பிப்ரவரி 5ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். குறிப்பாக, ஓட்டுநர் உரிமம் அல்லது பழகுநர் உரிமம் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனால், ஓட்டுநர் உரிமம் பெறுவதற்காக வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் பெண்களின் கூட்டம் அலைமோதுகிறது.

கோவை மாவட்டத்தில் மொத்தம் 4949 மகளிர் இந்த ஆண்டு இத்திட்டத்தில் பயனடைய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கோவையில் வழக்கமாக ஒரு நாளைக்கு 30 முதல் 35 பெண்கள் மட்டுமே ஓட்டுநர் உரிமம் எடுத்துச் செல்வார்கள். இந்த அறிவிப்பையடுத்து, கடந்த 3 நாட்களில் மட்டும் 500க்கும் மேற்பட்ட பெண்கள் ஓட்டுநர் உரிமம் பெற விண்ணப்பித்துள்ளனர். ஏற்கனவே விண்ணப்பித்திருந்த பெண்கள் ஆர்வத்துடன் வந்து ஓட்டுநர் உரிமம் பெற்றுச் செல்கின்றனர் என வட்டாரப் போக்குவரத்துக் கழக ஆய்வாளர் ஒருவர் கூறினார். காரைக்குடியில் ஒரு நாளைக்கு 300க்கும் மேற்பட்டோர் உரிமம் வேண்டி விண்ணப்பிக்கின்றனர்.

பின் இருக்கை நபருக்கும் ஹெல்மெட் கட்டாயம்!

3 நிமிட வாசிப்பு

பின் இருக்கை நபருக்கும் ஹெல்மெட் கட்டாயம்!

சிறப்புக் கட்டுரை: குழந்தை வளர்ப்பென்ன சவாலா?

15 நிமிட வாசிப்பு

சிறப்புக் கட்டுரை: குழந்தை வளர்ப்பென்ன சவாலா?

7000 போலி ஆதார் அட்டைகளை தயாரித்த நபர் கைது!

3 நிமிட வாசிப்பு

7000 போலி ஆதார் அட்டைகளை தயாரித்த நபர் கைது!

செவ்வாய் 30 ஜன 2018