மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 30 ஜன 2018

வாழ்நாளில் மறக்க முடியாத நாள்: சுசீந்திரன்

வாழ்நாளில் மறக்க முடியாத நாள்: சுசீந்திரன்

‘ஏமாலி’ படத்தில் நடித்து முடித்திருக்கும் அதுல்யா, சுசீந்திரன் கதாநாயகனாக அறிமுகவாகவிருக்கும் ‘சுட்டுப்பிடிக்க உத்தரவு’ படத்தில் கதாநாயகியாக நடிக்கவிருக்கிறார். இதன் படப்பிடிப்பு நேற்று (ஜனவரி 29) தொடங்கியுள்ளது.

தமிழ் சினிமாவில் இயக்குநர்கள் நடிகர்களாவது ஒன்றும் புதிதில்லை என்றாலும் ஒரு சிலரே நடிப்பில் கவனம் செலுத்துவர். ஆனால், தற்போதைய சூழலில் இயக்குநர்கள் நடிகர்களின் இடத்தைக் கைப்பற்றிவிடுவார்கள் போல. அப்படி இயக்குநர்களும் நடிகர்களாகக் களமிறங்குகின்றனர். அந்த வகையில் இயக்குநர் சுசீந்திரனும் ‘தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’ படத்தின் மூலம் கவனம் பெற்ற ராம் பிரகாஷ் ராயப்பா இயக்கத்தில் உருவாகவிருக்கும் ‘சுட்டுப்பிடிக்க உத்தரவு’ படத்தில் கதாநாயகனாகக் களமிறங்கியிருக்கிறார். ஆனால் தனித்து இல்லாமல் இயக்குநர் மிஷ்கின், விக்ராந்த் ஆகியோரோடு சேர்ந்து நடிக்கவிருக்கிறார். இதில் பிரதான கதாபாத்திரத்தில் நடிகை அதுல்யா நடிக்கிறார்.

க்ரைம் த்ரில்லர் வகையைச் சேர்ந்த இந்தப் படத்தை கல்பதரு பிக்சர்ஸ் சார்பில் பி.கே.ராம்மோகன் தயாரிக்கிறார். சுசீந்திரன் கதாநாயகனாகப் படப்பிடிப்பில் கலந்துகொள்ளவிருக்கும் இதே நாளில்தான் சுசீந்திரனுக்குச் சிறந்த இயக்குநர் என்ற அங்கீகாரம் தந்த வெண்ணிலா கபடிக்குழு படம் வெளியான நாளும்கூட. இந்த இரண்டு சம்பவங்களையும் குறிப்பிட்டு சுசீந்திரன் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

செவ்வாய் 30 ஜன 2018