மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 30 ஜன 2018

நிதித் தேவையில் உள்கட்டுமானத் துறை!

நிதித் தேவையில் உள்கட்டுமானத் துறை!

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியாவின் உள்கட்டுமானத் துறையின் மேம்பாட்டுக்கு 4.5 லட்சம் கோடி டாலர் நிதி தேவைப்படுவதாக பொருளாதார ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஜனவரி 29ஆம் தேதி மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி பாராளுமன்றத்தில் தாக்கல் செய்த 2017-18 நிதியாண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையில் உள்கட்டுமானத் துறை வளர்ச்சி குறித்து, ‘சர்வதேச அளவிலான உள்கட்டுமான வளர்ச்சி குறித்த கண்ணோட்டமானது வருவாய் உயர்வு மற்றும் பொருளாதாரச் செழிப்பு ஆகியவற்றைச் சார்ந்து வளர்ச்சியடைவதைக் காட்டுகிறது. இதன் மூலம் இந்திய உள்கட்டுமானத் துறையில் அடுத்த 25 ஆண்டுகளுக்கு முதலீடுகளுக்கான தேவை அதிகரிக்கும்.

2040ஆம் ஆண்டு வரையில் இந்தியாவின் உள்கட்டுமானத் துறைக்கு 4.5 லட்சம் கோடி டாலர் முதலீடுகள் தேவைப்படுகின்றன. இதன் மூலம் உள்கட்டுமானத்தை மேம்படுத்தி அதன் மூலம் பொருளாதார வளர்ச்சி மற்றும் சமூக நலனைப் பாதுகாக்க முடியும். இவ்வாறு உள்கட்டுமானத் துறையை மேம்படுத்தும் பட்சத்தில் இத்துறையில் 3.9 லட்சம் கோடி அளவிலான முதலீடுகளையும் ஈர்க்க முடியும். சாலை அமைப்பு, தொலைத் தொடர்பு, மின்னுற்பத்தி, லாஜிஸ்டிக், போக்குவரத்து ஆகிய பிரிவுகளில் அதிக முதலீடுகள் ஈர்க்கப்படும் வாய்ப்புகள் உள்ளன’ என்று கூறப்பட்டுள்ளது.

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

5 நிமிட வாசிப்பு

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ...

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ‌நிறுவனத்தின் எச்சரிக்கை!

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

செவ்வாய் 30 ஜன 2018