மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 30 ஜன 2018

ராணாவைக் காதலிக்கும் ரகுல்?

ராணாவைக் காதலிக்கும் ரகுல்?

பாகுபலி படத்தின் மூலம் கவனம்பெற்ற தெலுங்கு நடிகர் ராணாவும், நடிகை ரகுல் ப்ரீத் சிங்கும் காதலிப்பதாக வந்த செய்திக்கு விளக்கமளித்துள்ளார் ரகுல்.

பாகுபலி படத்தில் வில்லனாக நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தெலுங்கு நடிகர் ராணா டகுபதி. தமிழ், தெலுங்குப் படங்களில் நடித்துவரும் இவர் நடிகை திரிஷாவைக் காதலிப்பதாகத் தகவல் வெளியானது. அவர்கள் இருவரும் ஜோடியாக இருக்கும் புகைப்படங்களும் வெளியாகின. ஆனால் தங்களுக்குள் காதல் இல்லை என்றும் நட்பாகத்தான் பழகுகிறோம் என்றும் மறுத்துவந்தார்கள். இந்த நிலையில் தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் ரகுல் ப்ரீத் சிங்கும் ராணாவும் காதலிப்பதாகத் தெலுங்கு சினிமாவுலகில் பரவலாகப் பேசப்படுகிறது.

ராணாவுடன் காதல் எனச் செய்தி வருவதை அறிந்த ரகுல் ப்ரீத் சிங், “நானும் ராணாவும் நெருங்கிய நண்பர்களாக இருக்கிறோம். எங்கள் நண்பர்கள் குழுவில் உள்ள 20 பேர் திருமணம் ஆகாதவர்கள். நாங்கள் அனைவருமே நெருக்கமான நட்புடன் இருக்கிறோம். ராணாவுக்கும் எனக்கும் காதல் என்று வெளியாகும் வதந்திகளைப் பார்த்து எனக்குச் சிரிப்புதான் வருகிறது” என்று விளக்கமளித்துள்ளார்.

ஆனால் டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் வெளியான செய்திக்குறிப்பில், ரகுல் ப்ரீத் சிங் மறுத்தாலும் இருவரும் நட்சத்திர ஓட்டல்களில் ரகசியமாகச் சந்தித்து காதல் வளர்ப்பதாகவும், இவர்கள் காதலிப்பது உண்மைதான் என்று தெலுங்குப் படவுலகில் பரவலாகப் பேசப்படுவதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.

மோசமான டிரைவிங் நகரங்கள்: எந்த இடத்தில் சென்னை?

3 நிமிட வாசிப்பு

மோசமான டிரைவிங் நகரங்கள்: எந்த இடத்தில் சென்னை?

வேலைவாய்ப்பு : அறநிலையத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : அறநிலையத் துறையில் பணி!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் - ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

3 நிமிட வாசிப்பு

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் - ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

செவ்வாய் 30 ஜன 2018