'வைரி’யாக வரும் நேகா


உச்சத்துல சிவா உள்ளிட்ட சில படங்களில் கதாநாயகியாக நடித்த நேகா அடுத்ததாக வைரி என்ற பெயரில் உருவாகவிருக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
இவனுக்கு தண்ணில கண்டம், உச்சத்துல சிவா படங்களில் கதாநாயகியாக நடித்தவர் நேகா. தற்போது வைரி என்ற திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். பாபி சிம்ஹா நடிக்கும் வல்லவனுக்கு வல்லவன் படத்தை இயக்கிவரும் விஜய் தேசிங்கு இப்படத்தை இயக்குகிறார். யோகி சங்கவா ஹீரோவாக நடிக்கிறார். சொடக்கு பாடல் உள்ளிட்ட பல பாடல்களை பாடிய அந்தோணி தாசன் இசையமைப்பாளராக அறிமுகமாகவிருக்கிறார்.
இப்படம் குறித்து தெரிவித்த இயக்குநர் விஜய் தேசிங்கு, “தனக்குப் பிடிக்காதவங்கள, தன்ன பகைச்சிக்கிட்டவங்கள, தன்ன எந்த வகையிலாவது எதிர்க்கிறவங்கள கிராமங்களில் வைரினு சொல்லுவாங்க. வைரினா எதிரி, மன உறுதியுடன் எல்லாவற்றையும் எதிர்ப்பவன்; இதில்லாம வல்லூறுக்கும் வைரின்னுதான் பேர். சமூகத்தில் பெண்களை சிலர் கொடூரமான பேய்களாக சித்தரிக்கின்றனர். ஆனால் அவர்களுக்கு இழைக்கும் துரோகங்களும் இருக்கிறது. இந்தக் கருவை மையமாக வைத்து இதன் கதை அமைக்கப்பட்டிருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.