மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 30 ஜன 2018

ஜாமீன் கேட்கும் நாதுராம்

ஜாமீன் கேட்கும் நாதுராம்

கொளத்தூர் நகை கடை கொள்ளை வழக்கில் ஜாமீன் கேட்டு குற்றவாளி நாதுராம் எழும்பூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

கொளத்தூர் நகைக்கடை ஒன்றில் கடந்த டிசம்பர் மாதம் பல லட்சம் மதிப்பிலான தங்க வெள்ளி நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இந்த வழக்கில் கொள்ளையர்களை கைது செய்ய சென்னை போலீசார் ராஜஸ்தான் சென்றனர். அப்போது மதுரவாயல் காவல் ஆய்வாளர் பெரியபாண்டியன் சுட்டுக் கொலை செய்யப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்தக் கொள்ளை, கொலை தொடர்பாக கைது செய்யப்பட்டு ஜெய்ப்பூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நாதுராம், தினேஷ், பக்தாராம் ஆகிய மூன்று குற்றவாளிகளையும் சென்னை அழைத்து வந்த தமிழக தனிப்படை போலீசார் புழல் சிறையில் அடைத்தனர்.

மூவரையும் 10 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்த போலீசார் எழும்பூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவை இன்று (ஜனவரி 30) பரிசீலித்த நீதிமன்றம், கொள்ளை வழக்கு, காவல் ஆய்வாளர் சுட்டு கொல்லப்பட்டது தொடர்பாக நாதுராம் மற்றும் அவனது கூட்டாளிகள் தினேஷ், பக்தாராம் ஆகிய மூவரையும் 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்தது.

மோசமான டிரைவிங் நகரங்கள்: எந்த இடத்தில் சென்னை?

3 நிமிட வாசிப்பு

மோசமான டிரைவிங் நகரங்கள்: எந்த இடத்தில் சென்னை?

வேலைவாய்ப்பு : அறநிலையத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : அறநிலையத் துறையில் பணி!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் - ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

3 நிமிட வாசிப்பு

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் - ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

செவ்வாய் 30 ஜன 2018