தயாராகிவரும் விண்டோஸ் 10 லைட்!


மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் புதிய இயங்குதளமான விண்டோஸ் 10 வெளியானதில் இருந்து ரசிகர்கள் கவனத்தை அதிகம் ஈர்த்துள்ளது. அதிலும் மேம்படுத்தப்பட்ட சில வசதிகளுடன் புதிய விண்டோஸ் 10 லைட் என்ற இயங்குதளத்தை மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது.
விண்டோஸ் 10 வெளியானதும் அதைப் பயன்படுத்த பல பயனர்கள் விருப்பம் தெரிவித்தது மட்டுமின்றி அதை தனது கணினிகளில் இன்ஸ்டால் செய்தனர். ஆனால், கிராபிக்ஸ் வசதிகளை அதிகம் பயன்படுத்தும் விண்டோஸ் 10 கணினியின் வேகத்தைக் குறைக்கிறது என்றும், அதுமட்டுமின்றி குறைந்த வசதி கொண்ட கணினிகளில் இன்ஸ்டால் செய்ய முடியவில்லை என்றும் பயனர்கள் பலர் தங்களின் கருத்துகளைத் தெரிவித்தனர். எனவே மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அதற்குத் தீர்வாகச் சில மாற்றங்களை மேற்கொண்டு புதிய விண்டோஸ் 10 இயங்குதளத்தைத் தயாரித்து வருகிறது. விண்டோஸ் 10 லைட் எனப்படும் இந்த வெர்ஷன் வெளியானதும் பயனர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற வாய்ப்புள்ளது.