மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 30 ஜன 2018

திமுக வழக்கு: அச்சத்தில் காவல் துறை அதிகாரிகள்!

திமுக வழக்கு: அச்சத்தில் காவல் துறை அதிகாரிகள்!

குட்கா முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணை கோரிய திமுக வழக்கில் எழுத்துப்பூர்வமான வாதங்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

குட்கா ஊழல் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்த நிலையில் இது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டுமென திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். இவ்வழக்கில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்த வருமான வரித் துறையினர், குட்கா நிறுவன உரிமையாளர் மாதவ் ராவிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் காவல் துறை உயர் அதிகாரிகள் மற்றும் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டது குறித்து குறிப்பிடப்பட்டிருந்ததாக கூறியிருந்தனர்.

மேலும் இது குறித்துத் தனக்கு வருமான வரித் துறை எழுதிய கடிதத்தை இணைத்து 2016ஆம் ஆண்டு டிஜிபி அசோக்குமார் அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவுக்குக் கடிதம் எழுதியதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் கடந்த 23ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, அப்துல் குத்தூஸ் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், குட்கா முறைகேடு விவகாரத்தில் பல மாநில அதிகாரிகளும் சம்பந்தப்பட்டுள்ள நிலையில், மாநிலக் காவல் துறையின் விசாரணை எப்படிச் சரியானதாக இருக்கும், ஆகவே வழக்கை சிபிஐக்கு மாற்றுவதுதான் சரியாக இருக்கும். இதற்கு அரசு தரப்பு எதிர்ப்புத் தெரிவிக்கக் கூடாது என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். ஆனால் லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை சரியான பாதையில் செல்கிறது எனவே சிபிஐ விசாரணை அவசியமில்லை என்று தமிழக அரசின் சார்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.

கடந்த 25ம் தேதி நடந்த வாதத்தில், “ குட்கா விவகாரத்தை சிபிஐ விசாரணைக்கு மாற்ற மாநில அரசு தயங்குவது ஏன் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும், “தமிழக அரசு, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடத் தயங்குவதால், இந்த வழக்கை ஆழ்ந்து விசாரிக்க வேண்டியுள்ளதாகத் தோன்றுகிறது. இந்த விவகாரத்தில் ஏதோ தீவிரம் அல்லது சிக்கல் இருப்பதாகவே தோன்றுகிறது” என்றும் கருத்துக் கூறினர். வாதங்கள் முடிவடைந்த நிலையில், எழுத்துப்பூர்வமான வாதங்களை ஜனவரி 30ஆம் தேதி தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசின் சார்பிலும், மனுதாரர் சார்பில் எழுத்துப்பூர்வமான வாதங்கள் தாக்கல் செய்யப்பட்டது. மத்திய அரசின் சார்பில் எழுத்துப்பூர்வ வாதம் தாக்கல் செய்யப்படவில்லை. இதையடுத்து வழக்கின் தீர்ப்பைத் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

செவ்வாய் 30 ஜன 2018