2022இல் ரியல் எஸ்டேட்?

இந்தியாவின் ரியல் எஸ்டேட் மற்றும் உள்கட்டுமானத் துறைகளில் 2022ஆம் ஆண்டுக்குள் சுமார் 1.5 கோடி வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று பொருளாதார ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
2017-18 நிதியாண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கை ஜனவரி 29ஆம் தேதி மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லியால் வெளியிடப்பட்டது. அதில், ‘விவசாயத்தைத் தொடர்ந்து இந்தியாவில் அதிக வேலைவாய்ப்புகளை வழங்கும் துறைகளாக ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமானம் ஆகிய துறைகள் இருக்கின்றன. இத்துறைகள் 2013ஆம் ஆண்டில் 4 கோடிப் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கியது. இந்த எண்ணிக்கை 2017ஆம் ஆண்டில் 5.2 கோடியாகவும், 2022ஆம் ஆண்டில் 6.7 கோடியாகவும் இருக்கும். எனில், ஆண்டுக்கு 30 லட்சம் வேலைவாய்ப்புகள் வீதம், ஐந்து ஆண்டுகளில் சுமார் 1.5 கோடி புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்’ என்று கூறப்பட்டுள்ளது.