மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 30 ஜன 2018

நடிகைக்குப் பாலியல் தொல்லை!

நடிகைக்குப் பாலியல் தொல்லை!

பாலிவுட் முன்னாள் நடிகை ஜீனத் அமன் தனக்குத் தொழிலதிபர் ஒருவர் பாலியல் தொந்தரவு அளிப்பதாக போலீஸில் புகார் அளித்துள்ளார்.

1980களில் பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாகக் கொடிகட்டிப் பறந்தவர் நடிகை ஜீனத் அமன். அவருக்காகவே பல திரைப்படங்கள் பல நாட்களுக்கு ஓடிய காலமும் உண்டு. இந்நிலையில், அண்மையில் அவர் மும்பை ஜுஹூ போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருக்கிறார். அதில், தனக்குத் தொழிலதிபர் ஒருவர் பாலியல் தொந்தரவு அளிப்பதாகக் கூறியுள்ளார். இதனையடுத்து போலீஸார் பெண்ணைப் பின்தொடர்தல் (சட்டப்பிரிவு 304 டி), பெண்ணின் மாண்பைக் கெடுக்கும் வகையில் செயல்படுதல் (சட்டப்பிரிவு 509) ஆகியனவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இது குறித்து போலீஸார் கூறும்போது, "ஜீனத் அமனுக்கும் அவர் புகார் கொடுத்துள்ள தொழிலதிபருக்கும் இடையே ஏற்கனவே நட்பு இருந்துள்ளது. ஆனால், நட்பு கசந்துபோகவே ஜீனத் அவரிடமிருந்து விலகியுள்ளார். ஆனால், அந்தத் தொழிலதிபரோ தொடர்ந்து ஜீனத்துக்கு தொலைபேசி வாயிலாகத் துன்புறுத்தல் அளித்துள்ளார். அவர் செல்லுமிடமெல்லாம் பின்தொடர்ந்துள்ளார். இதன் காரணமாகவே ஜீனத் புகார் அளித்துள்ளார்" எனத் தெரிவித்தனர்.

ஜீனத் ஒரு தொழிலதிபருடன் இணைந்து வியாபாரத்தில் ஈடுபட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், சமீபத்தில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்படவே, ஜீனத் அந்தத் தொழிலில் இருந்து விலகிவிட்டாராம். ஆனால், அந்தத் தொழிலதிபர் ஜீனத்தை விடாமல் பின்தொடர்ந்துவருவதாகவும், பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகவும் அவர் புகாரளித்துள்ளதாக மும்பை போலீஸார் தெரிவித்துள்ளனர்.

மார்க்கெட்டில் குவிந்த சின்ன வெங்காயம்: விலை சரிவால் விவசாயிகள் ...

3 நிமிட வாசிப்பு

மார்க்கெட்டில் குவிந்த சின்ன வெங்காயம்: விலை சரிவால் விவசாயிகள் கவலை!

உள்ளூர் மொழிகளும் தேசிய மொழிகள் - கல்வி அமைச்சர்!

3 நிமிட வாசிப்பு

உள்ளூர் மொழிகளும் தேசிய மொழிகள் - கல்வி அமைச்சர்!

நான்கு வழிச் சாலை பணியைத் தடுத்து நிறுத்திய கிராம மக்கள்!

3 நிமிட வாசிப்பு

நான்கு வழிச் சாலை பணியைத் தடுத்து நிறுத்திய கிராம மக்கள்!

செவ்வாய் 30 ஜன 2018