மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 30 ஜன 2018

இந்தியா-ஆஸ்திரேலியா: சனிக்கிழமை பலப்பரீட்சை!

இந்தியா-ஆஸ்திரேலியா: சனிக்கிழமை  பலப்பரீட்சை!

இந்திய, பாகிஸ்தான் அணிகள் மோதிய ஜூனியர் உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி 203 ரன்கள் வித்தியாசத்தில் ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது.

நியூசிலாந்தில் 19 வயதிற்கு உட்பட்டோருக்கான ஜூனியர் உலகக் கோப்பைத் தொடர் நடைபெற்றுவருகிறது. அதில் இன்று (ஜனவரி 30) நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் இந்திய, பாகிஸ்தான் அணிகள் மோதின.

டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் கேப்டன் ப்ரித்வி ஷா (41), மன்ஜோத் கல்ரா (47) இருவரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்திய அணி முதல் விக்கெட்டிற்கு 89 ரன்கள் சேர்த்து வலுவான தொடக்கத்தைப் பெற்றது. ஆனால் தொடர்ச்சியாக அர்ஷத் இக்பால் வீசிய மூன்று ஓவர்களில் மூன்று விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தவித்தது. அப்போது ஜோடி சேர்ந்த சுப்மன் கில், அனுகூல் சுதாகர் ராய் ஆகிய இருவரும் இந்திய அணியைச் சரிவிலிருந்து மீட்டனர். அனுகூல் ஒருபுறம் நிதானமாக விளையாட, மறுமுனையில் வழக்கம் போல் கில் அதிரடியாக விளையாடி ரன் சேர்க்கத் தொடங்கினார்.

33 ரன்கள் சேர்த்திருந்த அனுகூல் வெளியேறிய பின்னர் இந்திய அணி மீண்டும் விக்கெட்டுகளை இழக்கத் தொடங்கியது. இந்த முறை முகமது மூசா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இருப்பினும் மறுமுனையில் நிலைத்து நின்று விளையாடிய சுப்மன் கில் (102) சதம் அடித்து கடைசிவரை ஆட்டம் இழக்காமல் களத்தில் இருந்தார். இந்திய அணி 50 ஓவர் முடிவில் 272 ரன்களைச் சேர்த்து 9 விக்கெட்டுகளை இழந்திருந்தது. பாகிஸ்தான் தரப்பில் முகமது மூசா 4 விக்கெட்டுகளையும், அர்ஷத் இக்பால் 3 விக்கெட்டுகளையும், ஷாஹேன் அஃப்ரிதி ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

273 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி இந்திய அணியின் பந்து வீச்சினைத் தாக்குப் பிடிக்க முடியாமல் தடுமாறியது. தொடக்க வீரர்கள் இம்ரான் ஷா (2), மொஹமது சித் (7) இருவரும் இஷான் போரேல் பந்தில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். அதன் தொடர்ச்சியாக நசீர் (18), அலி ஷார்யப் (1), அஹ்மத் அலம் (4), முஹமது தாகா (4) ஆகியோர் குறைந்த ரன்களுக்குள் ஆட்டமிழந்ததால் பாகிஸ்தான் அணி முக்கியமான மட்டையாளர்களை இழந்து தவித்தது. கேப்டன் ஹசன் கானும் ஒரு ரன் மட்டுமே எடுத்து வெளியேறி ஏமாற்றம் அளித்தார். இறுதிவரை நின்று விளையாடிய முஹமது மூசா 11 ரன்கள் சேர்த்தார். பாகிஸ்தான் அணி 29.3 ஓவர்களில் 69 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணி 203 ரன்கள் வித்தியாசத்தில் அரையிறுதியில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. 102 ரன்களைச் சேர்த்த சுப்மன் கில் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

5 நிமிட வாசிப்பு

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ...

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ‌நிறுவனத்தின் எச்சரிக்கை!

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

செவ்வாய் 30 ஜன 2018