மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 30 ஜன 2018

தியாகிகள் தினம்: சிக்னல்களில் மவுன அஞ்சலி!

தியாகிகள் தினம்: சிக்னல்களில் மவுன அஞ்சலி!

தியாகிகள் தினத்தை முன்னிட்டு சென்னையில் அனைத்து சிக்னலிலும் இரு நிமிடம் போக்குவரத்து நிறுத்தம் செய்யப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்தியாவின் சுதந்திரத்திற்காக அயராது பாடுபட்டு, இன்னுயிரை ஈத்த சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு, அஞ்சலி செலுத்தும் விதமாகவும், அவர்களை நினைவுகூரும் விதமாகவும், மகாத்மா காந்தி மறைந்த நாளான ஜனவரி 30ஆம் தேதி ஆண்டுதோறும் தியாகிகள் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. குடியரசுத் தலைவர், பிரதமர், பாதுகாப்பு அமைச்சர் உள்ளிட்டோர் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்துவர். இந்நாள் துக்க நாளாகக் கருதப்படுகிறது.

2018ஆம் ஆண்டுக்காகத் தியாகிகள் தினத்தை முன்னிட்டு சென்னையில் அனைத்து சிக்னல்களிலும் இரு நிமிடங்கள் போக்குவரத்து நிறுத்தப்படும் என்றும் இதற்கு வாகன ஓட்டிகள் ஒத்துழைப்புத் தர வேண்டும் என்றும் சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் நேற்று (ஜனவரி 29) அறிவித்திருந்தார்.

அதன்படி இன்று 71 ஆவது தியாகிகள் தினத்தை முன்னிட்டு காலை 11.00 முதல் 11.02 வரை இரு நிமிடம் போக்குவரத்து சிக்னலில் வாகனங்கள் நிறுத்தப்பட்டு தியாகிகளுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நடைபெற்றது. டெல்லியில் உள்ள காந்தி நினைவிடத்தில் குடியரசுத்

தலைவர் ராம்நாத் கோவிந்த் மரியாதை செலுத்தினார்

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

செவ்வாய் 30 ஜன 2018