மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 30 ஜன 2018

வருவாயைக் குறைக்கும் பருவநிலை மாற்றம்!

வருவாயைக் குறைக்கும் பருவநிலை மாற்றம்!

இந்தியாவில் நிலவும் பருவநிலை மாற்றத்தால் விவசாயிகளின் வருவாய் 25 சதவிகிதம் வரையில் குறையும் வாய்ப்புள்ளதாகப் பொருளாதார ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

2017-18 நிதியாண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கை ஜனவரி 29ஆம் தேதி பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில், நடப்பு நிதியாண்டின் பொருளாதார வளர்ச்சி, எதிர்காலத் திட்டங்கள், வேலைவாய்ப்பு, தொழில் துறை மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றிருந்தன. விவசாய உற்பத்தி மற்றும் வருவாய் பற்றிய மதிப்பீடுகளும் இருந்தன. கடுமையான வெயில் மற்றும் அளவுக்கு அதிகமான மழை ஆகிய காரணங்களால் விவசாய உற்பத்தி பாதிக்கப்படுவதாகவும், அதைச் சீராக்க அரசு சரியான கொள்கைகளை வகுக்காவிட்டால் விவசாய வருவாய் 15 முதல் 18 சதவிகிதம் வரையில் குறையும் எனவும் கூறப்பட்டுள்ளது. நீர்ப்பாசனத் திட்டங்கள் இல்லாத பகுதிகளில் இந்த பாதிப்பு 20 முதல் 25 சதவிகிதம் வரையில் இருக்கும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

செவ்வாய் 30 ஜன 2018