மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 30 ஜன 2018

பொன்னாரை விமர்சிக்கும் ஹெச்.ராஜா

பொன்னாரை விமர்சிக்கும் ஹெச்.ராஜா

நானும் பச்சை திராவிடன்தான் என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதற்கு, ஹெச்.ராஜா விமர்சனம் செய்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு பாஜகவினர் சட்டமன்றத் தேர்தலைக் குறிவைத்துக் கழகங்கள் இல்லாத் தமிழகம், கவலைகள் இல்லாத் தமிழகம் என்ற கோஷத்தை முன்வைத்தனர். ஆனால் தேர்தலில் வெற்றிபெற முடியவில்லை. இதைத் தொடர்ந்து பாஜகவினர் திராவிடக் கட்சிகளை விமர்சித்துவந்தனர். மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனும், அதிமுக, திமுக ஆகியவை தங்களுடைய கடைசி அத்தியாயத்தை எழுதிக்கொண்டிருக்கின்றன என்று விமர்சித்துவந்தார்.

இந்நிலையில் கடந்த 28ஆம் தேதி செய்தியாளர்களிடம் பேசிய பொன்.ராதாகிருஷ்ணன், நான் திராவிடத்தை ஒழிக்க வேண்டும் என்று கூறவில்லை. நானும் பச்சை திராவிடன்தான் என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் இதுகுறித்து அக்கட்சியைச் சேர்ந்த தேசியச் செயலாளர் ஹெச்.ராஜாவே விமர்சனம் செய்துள்ளார். ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில், "மாண்புமிகு அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அவர்கள் முன்வைத்துள்ள கோஷம். கழகங்கள் இல்லாத் தமிழகம். ஆனால் நடத்துகின்ற விவாதம் திராவிடம் பற்றி என்று குறிப்பிட்டுள்ள அவர், இது வீண் விவாதம் ஆரிய திராவிட இனவாத கட்டுக் கதைக்குச் சரியான இடம் குப்பை தொட்டிதான் என்று Dr. அம்பேத்கர் அவர்கள் கூறியுள்ளார்" என்றும் குறிப்பிட்டுள்ளார்.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

செவ்வாய் 30 ஜன 2018