மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 30 ஜன 2018

ஹெல்த் ஹேமா: கொழுப்பைக் குறைக்கும் கறிவேப்பிலை!

ஹெல்த் ஹேமா: கொழுப்பைக் குறைக்கும் கறிவேப்பிலை!

கறிவேப்பிலையும் ஒருவகை கீரைதான். அதில் வைட்டமின் ஏ அதிகம் இருக்கிறது. கறிவேப்பிலையை உணவில் சேர்த்துச் சாப்பிட்டால், உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி ஏற்படும். கொழுப்பைக் குறைக்கும்.

* ஜீரணத்திற்கும், வயிற்று நலனுக்கும் கறிவேப்பிலை ஏற்றது.

* கறிவேப்பிலையை அரைத்து மோரில் கலக்கி குடித்தால், வயிற்றுக்கு இதமாக இருக்கும்.

* கறிவேப்பிலையை சிறிதளவு அரைத்து, வெறும் வயிற்றில் சுடுநீரைப் பயன்படுத்தி விழுங்கிவந்தால், உடலில் இருக்கும் கொழுப்பு குறைய வாய்ப்புண்டு.

* இறைச்சி சாப்பிட்டுவிட்டு ஜீரணத் தொல்லை ஏற்படுகிறவர்கள் இஞ்சி, கறிவேப்பிலை இரண்டையும் அரைத்து, மோரில் கலக்கி குடிக்க வேண்டும்.

* கறிவேப்பிலைக்கு சரும நோய்களைப் போக்கும் சக்தியும் இருக்கிறது.

* பச்சை மஞ்சளையும் கறிவேப்பிலையையும் சேர்த்து அரைத்து தொடர்ந்து மூன்று நாள்கள் காலில் தேய்த்தால், குதிகால் வெடிப்பு சரியாகும். பாதத்துக்கு அழகும் கிடைக்கும்.

* தேங்காய் எண்ணெயில் கறிவேப்பிலையைக் கலந்து காய்ச்சி தலையில் தேய்த்தால், முடி நன்றாக வளரும். கறுப்பு நிறமும் முடிக்குக் கிடைக்கும்.

* கறிவேப்பிலையை, எலுமிச்சைச்சாறில் அரைத்து அரை மணிநேரம் கழித்து குளியுங்கள். அவ்வாறு செய்தால் பேன், பொடுகு, ஈறு போன்றவை நீங்கும்.

* கறிவேப்பிலை, கற்றாழை, மருதாணி போன்றவற்றைச் சேர்த்து எண்ணெயில் காய்ச்சி தலையில் தேய்க்கும் பழக்கத்தைக் கொண்டிருந்தால் முடி உதிர்வது தடுக்கப்படும்.

* தினமும் சாப்பிடும் உணவில் கறிவேப்பிலை சேர்த்தால், கண்களின் பார்வை சக்திக்கு நல்லது.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

செவ்வாய் 30 ஜன 2018