மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 30 ஜன 2018

நாளை நிலாவைக் காண மிஸ் பண்ணிடாதீங்க!

நாளை நிலாவைக் காண மிஸ் பண்ணிடாதீங்க!

150 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் அரிய நிகழ்வுகளான `ப்ளூ மூன்', `சூப்பர் மூன்' மற்றும் `பிளட் மூன்' நாளை (ஜனவரி 31) நடக்கிறது.

சூரியனுக்கும், நிலவுக்கும் நடுவில் பூமி வரும்போது, பூமியின் நிழல் நிலவின் மீது படும். அப்போது சந்திர கிரகணம் நிகழ்கிறது. சூரியன், நிலா மற்றும் பூமி ஒரே நேர்கோட்டில் வரும்போது, முழு சந்திர கிரகணம் நிகழ்கிறது. அப்போது, நிலா நீல நிறத்தில் காட்சி அளிக்கும். அதனால், அது `ப்ளூ மூன்' என்று அழைக்கப்படும். 2018ஆம் ஆண்டின் முதல் சந்திரகிரகணம் இது. இந்த முழு சந்திரகிரகணத்தால் நாளை நள்ளிரவில் பசிபிக் பெருங்கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்று கூறப்படுகிறது.

இந்தச் சந்திர கிரகணத்தின்போது, சூரிய ஒளி நிலவின் மீது நேரடியாகப் படாது. ஆனால், வளி மண்டலத்தால் சிதறடிக்கப்படும் ஒளி, நிலவின் மேல் படும். குறைந்த அலை நீளமுள்ள ஒளிக்கதிர்கள், வளி மண்டலத்தால் சிதறடிக்கப்பட்டு, அதிக அலை நீளமுள்ள சிவப்பு நிறம் மட்டும் நிலவை அடைகிறது. இதனால், சிவந்த நிலவாக தோன்றும். இது, `பிளட் மூன்' என்று அழைக்கப்படும்.

நிலா, பூமியைச் சுற்றி வரும்போது, மாதத்துக்கு ஒருதடவை பூமியை மிகவும் நெருங்கி வரும். அப்போது, நிலா வழக்கத்தைவிட பெரியதாக சூப்பர் மூனாக தோன்றும். இது `சூப்பர் மூன்' என்று அழைக்கப்படுகிறது. அந்த அரிய நிகழ்வும், முழு சந்திர கிரகணத்தின்போதே நடக்கிறது. இதனால் வழக்கத்தை விட 10 சதவீதம் பெரியதாகவும் சற்று பிரகாசமாகவும் நிலா காட்சி அளிக்கும் என்று வானியல் வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

செவ்வாய் 30 ஜன 2018