மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 30 ஜன 2018

சரிவடைந்த காய்கனி ஏற்றுமதி!

சரிவடைந்த காய்கனி ஏற்றுமதி!

2017ஆம் நிதியாண்டின் முதல் எட்டு மாதங்களில் இந்தியாவின் காய்கறி மற்றும் பழங்களுக்கான ஏற்றுமதி 15 சதவிகிதம் குறைந்துள்ளதாக வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.

2017ஆம் ஆண்டின் ஏப்ரல் முதல் நவம்பர் வரையில் இந்தியாவின் காய்கறி ஏற்றுமதி 16 லட்சம் டன்னாகக் குறைந்துள்ளது. அதற்கு முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் காய்கறி ஏற்றுமதி 22.8 லட்சம் டன்னாக இருந்தது. வெங்காயம், தக்காளி, வாழை போன்ற பொருட்களுக்கான தேவை மற்றும் விநியோகம் குறைந்ததால் காய்கறி ஏற்றுமதி வீழ்ச்சியடைந்துள்ளதாக வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்த ஆணையத்தின் தலைவர், டி.கே.சிங் ஏற்றுமதி வீழ்ச்சி குறித்து ஐ.ஏ.என்.எஸ். ஊடகத்திடம் கூறுகையில், “காய்கறிகளின் ஏற்றுமதியில் வெங்காயத்தின் பங்கு 50 சதவிகிதத்துக்கும் மேல் உள்ளது. வெங்காயத்தின் குறைந்தபட்ச ஏற்றுமதி விலை டன் ஒன்றுக்கு 850 டாலராகக் குறைந்ததும், வெங்காயத்தின் குறைந்த உற்பத்தியுமே காய்கறிகளின் ஏற்றுமதி வீழ்ச்சிக்குக் காரணங்களாகும். மதிப்பு அடிப்படையில் ஏப்ரல் - நவம்பரில் மொத்தம் ரூ.5,416 கோடி மதிப்புக்குக் காய்கனிகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன” என்றார்.

மார்க்கெட்டில் குவிந்த சின்ன வெங்காயம்: விலை சரிவால் விவசாயிகள் ...

3 நிமிட வாசிப்பு

மார்க்கெட்டில் குவிந்த சின்ன வெங்காயம்: விலை சரிவால் விவசாயிகள் கவலை!

உள்ளூர் மொழிகளும் தேசிய மொழிகள் - கல்வி அமைச்சர்!

3 நிமிட வாசிப்பு

உள்ளூர் மொழிகளும் தேசிய மொழிகள் - கல்வி அமைச்சர்!

நான்கு வழிச் சாலை பணியைத் தடுத்து நிறுத்திய கிராம மக்கள்!

3 நிமிட வாசிப்பு

நான்கு வழிச் சாலை பணியைத் தடுத்து நிறுத்திய கிராம மக்கள்!

செவ்வாய் 30 ஜன 2018