மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 30 ஜன 2018

5G : முந்தும் நிறுவனம்!

5G : முந்தும் நிறுவனம்!

சீனாவைச் சேர்ந்த மொபைல் தயாரிப்பு நிறுவனமான oppo, அதன் 5G மாடல் தயாரிப்பில் தடம் பதித்துள்ளது.

இந்தியாவில் கடந்த இரண்டு ஆண்டுகளில் அதிக வளர்ச்சியடைந்து வரும் oppo நிறுவனம் மொபைல் விற்பனையை மேலும் அதிகரிக்க புதுமையான சில அம்சங்களை சேர்த்து வருகிறது. அதன்படி குவால்கம் நிறுவனத்துடன் இணைந்து புதிய 5G மாடல்களை தயாரிக்க ஒப்பந்தம் செய்துள்ளதாக oppo நிறுவனத்தின் தலைவர் டோனி சென் சமீபத்தில் சீனாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

ப்ராசஸ்சர் தயாரிப்பில் முன்னிலை வகிக்கும் நிறுவனமான குவால்கம் கடந்த ஆண்டே 5G தொழில்நுட்பம் கொண்ட கருவிகளைத் தயாரிக்கவிருப்பதாக தகவல் தெரிவித்திருந்தது. இந்நிலையில் தற்போது oppo நிறுவனத்துடன் இணைந்து ஸ்மார்ட்போன் தயாரிப்பில் இந்த கருவிகளை உபயோகம் செய்ய உள்ளது. மேலும் oppo நிறுவனத்தின் துணைத் தலைவர் ஆலன் யு இதுகுறித்து பேசும்பொழுது, "முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு 5G தொழில்நுட்பம் ஸ்மார்ட்போன் உலகில் மிகப்பெரும் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும். குவால்கம் நிறுவனத்துடன் தொடர்ந்து இதே போன்றே பணியாற்றி மேலும் பல புதுமையை oppo நிறுவனம் மக்களிடம் கொண்டு செல்லும்" எனத் தெரிவித்தார்.

இதற்கு முன்னர் இந்த 5G தொழில்நுட்பத்தை நோக்கியா நிறுவனம் வடிவமைத்து வருவதாக தகவல் வெளியாகி இருந்தது. தற்போது அதற்கு போட்டியாக oppo நிறுவனமும் களத்தில் இறங்கியுள்ளது.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

செவ்வாய் 30 ஜன 2018