மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 30 ஜன 2018

20 புதிய விமானங்கள்: ஸ்பைஸ்ஜெட்!

20 புதிய விமானங்கள்: ஸ்பைஸ்ஜெட்!

பிப்ரவரி 11ஆம் தேதி முதல் இந்தியாவின் உள்நாட்டு வழித்தடங்களில் 20 புதிய விமானங்கள் இயக்கப்படும் என ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் அறிவித்துள்ளது.

டெல்லியின் குருகிராம் நகரத்தைத் தலைமையிடமாகக் கொண்டு குறைந்த கட்டணத்தில் விமானப் போக்குவரத்து சேவை வழங்கி வரும் நிறுவனம்தான் ஸ்பைஸ்ஜெட். இந்நிறுவனம் பிப்ரவரி 11ஆம் தேதி முதல் 20 புதிய விமானங்களை இயக்கவுள்ளது. இதில் 18 விமானங்கள் தென்னிந்தியாவில் மட்டுமே இயக்கப்படும் எனவும், ஆந்திர மாநிலத்துக்கு மட்டும் 10 விமானங்கள் இயக்கப்படும் எனவும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது. கொல்கத்தா - ஜபல்பூர், பெங்களூரு - புதுச்சேரி ஆகிய வழித்தடங்களில் தினசரி நேரடி விமானங்களை இயக்கும் ஒரே நிறுவனம் என்ற பெருமையையும் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் தனதாக்கவுள்ளது.

பெங்களூரு - ராஜமுந்திரி, சென்னை - மங்களூரு, கவுகாத்தி - சென்னை, பெங்களூரு - திருப்பதி (செவ்வாய் தவிர்த்து) அனைத்துத் தினங்களிலும் தினசரி நேரடி விமானங்களை இயக்கவுள்ளதாக ஸ்பைஸ்ஜெட் அறிவித்துள்ளது. சென்னை - விசாகப்பட்டினம், கொல்கத்தா - விசாகப்பட்டினம், சென்னை - விஜயவாடா, பெங்களூரு - சென்னை ஆகிய வழித்தடங்களிலும் கூடுதல் விமானங்கள் இயக்கப்படவுள்ளன.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

செவ்வாய் 30 ஜன 2018