மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 30 ஜன 2018

பிப்ரவரி: சுற்றுப்பயண சூறாவளி!

பிப்ரவரி: சுற்றுப்பயண சூறாவளி!

தமிழக அரசியலில் பரபரப்புக்குப் பஞ்சமில்லாத நிலையில், இந்த பிப்ரவரி மாதமும் அதற்கு விதிவிலக்கல்ல. ஆர்.கே.நகர் தோல்விக்குப் பிறகு கட்சியை அமைப்பு ரீதியாக வலுப்படுத்த வேண்டும் என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் முடிவு செய்துள்ளார். உள்ளாட்சித் தேர்தலுக்குள் வலுப்படுத்த வேண்டும் என்பது அவருடைய திட்டம். இதற்காக பிப்ரவரி 1ஆம் தேதி முதல் மார்ச் 22ஆம் தேதி வரை திமுக மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள், துணை அமைப்புகளின் அமைப்பாளர்களுடன் அவர் ஆய்வுக் கூட்டம் நடத்தவுள்ளார்.

இதற்கிடையே, பிப்ரவரி 22ஆம் தேதி ராமநாதபுரத்தில் தனது கட்சியின் பெயரை அறிவிக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ள கமல், அன்றைய தினமே அரசியல் சுற்றுப்பயணத்தை மேற்கொள்ளவுள்ளதாகவும் அறிவித்துள்ளார்.

ஆரம்ப கட்டமாக மதுரை, ராமநாதபுரம், திண்டுக்கல், சிவகங்கை மாவட்ட மக்களைச் சந்திக்கவுள்ளதாக அவர் கூறியுள்ளார். தனது பயணத்துக்கு ‘நாளை நமதே’ எனப் பெயரிட்டுள்ள அவர் நற்பணி மன்ற நிர்வாகிகளுடன் அண்மையில் ஆலோசனை மேற்கொண்டார். இதில், சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களின் தேவைகள் குறித்தும் அடுத்த கட்ட சுற்றுப்பயணத்தை எப்போது தொடங்குவது, எங்கு தொடங்குவது என்பது குறித்தும் கேட்டறிந்தார். ட்விட்டரில் மட்டுமே கருத்து தெரிவித்து வருகிறார் என்ற விமர்சனத்துக்குப் பதிலளிக்கும் விதமாக மக்களை நேரிடைய சந்திக்க முடிவு செய்துள்ள அவரின் பயணம் எப்படி இருக்கும் என்பதை அறிய அரசியல் கட்சிகளும் காத்திருக்கின்றன.

இதற்கிடையே, ஆளும்கட்சிக்கு எதிரான மக்களின் நிலையை தனக்குச் சாதகமாக்கும் விதமாக தினகரனும் சுற்றுப்பயணம் அறிவித்துவிட்டார்.

‘மக்கள் சந்திப்பு புரட்சிப்பயணம்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தச் சுற்றுப்பயணத்தைக் கமலைப்போலவே தனது சொந்த மாவட்டத்தில் இருந்து தினகரன் தொடங்கவுள்ளார். முதற்கட்டமாக பிப்ரவரி 2ஆம் தேதி திருவிடைமருதூரிலும் 3ஆம் தேதி குடந்தையிலும் 4ஆம் தேதி பாபநாசம் தொகுதியிலும் 5ஆம் தேதி திருவையாறு தொகுதியிலும் தினகரன் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார். அடுத்த கட்டமாகச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள ஊர்களின் பெயர்கள் விரைவில் அறிவிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. மக்களிடம் எடுபடப்போவது மக்கள் சந்திப்பு புரட்சிப்பயணமா அல்லது நாளை நமதே சுற்றுப்பயணமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

2 நிமிட வாசிப்பு

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்! ...

3 நிமிட வாசிப்பு

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்!

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி ...

3 நிமிட வாசிப்பு

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி

செவ்வாய் 30 ஜன 2018