மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 30 ஜன 2018

மூதாட்டியிடம் 30 பவுன் கொள்ளை!

மூதாட்டியிடம் 30 பவுன் கொள்ளை!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு வந்த மூதாட்டியிடம் மூன்று பேர் கொண்ட கும்பல் கொள்ளையடித்து விட்டுத் தப்பித்ததாகக் காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

அரசு மருத்துவமனைகளைக் குறிவைத்து குழந்தைகளைத் திருடுவது, நோயாளிகளிடம் பணம் மற்றும் நகைகள் திருடுவது போன்ற செயல்கள் தற்போது அதிகரித்து வருகிறது. இதனால் தமிழக அரசு, மருத்துவமனைகளில் மக்கள் நடமாட்டமுள்ள பகுதியில் சி.சி.டி. கேமிராக்களைப் பொருத்திக் கண்காணித்து வருகிறது.

இந்த நிலையில் நேற்று (ஜனவரி 29) சரஸ்வதியம்மாள் என்ற மூதாட்டி ஒசூர் நகரக் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், ‘அரசு மருத்துவமனைக்கு சுகர், உப்பு அளவு தெரிந்துகொள்ள ரத்தப் பரிசோதனை செய்ய வந்தேன். அப்போது மூன்று பேர் என் அருகில் வந்து, பாட்டி மருத்துவமனையில் திருட்டுப் பசங்க அதிகமாக இருக்கிறார்கள். அது தெரியாமல் கையில் வளையலும், கழுத்தில் ஜெயினும் போட்டுருக்கீங்களே... அதைக் கழட்டி ஒரு பையில் பத்திரமாக வைத்துக்கொண்டு ரத்தம் கொடுக்கப் போங்க என்றார்கள். நானும் அதை நம்பி 30 பவுன் நகைகளைக் கழற்றி ஒரு பையில் வைத்தேன். உடனே அதை அவர்கள் பிடுங்கிவிட்டு ஓடிவிட்டார்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து அப்பகுதி ஆய்வாளர் சோமசுந்தரம் உத்தரவின்பேரில், இரண்டு போலீஸார், நகைகளைப் பறிகொடுத்த சரஸ்வதியை அழைத்துக்கொண்டு அரசு மருத்துவமனைக்குள்ளும், வெளியிலும் விசாரித்து வருகிறார்கள்.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

செவ்வாய் 30 ஜன 2018