மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 30 ஜன 2018

கோயம்பேடு: காய்கறி விலை வீழ்ச்சி!

கோயம்பேடு: காய்கறி விலை வீழ்ச்சி!

சென்னை கோயம்பேடு மொத்த விற்பனைச் சந்தையில் காய்கறிகளின் வரத்து அதிகரித்துவருவதால் அவற்றின் விலை மேலும் குறைந்துள்ளது.

சென்னை கோயம்பேடு மொத்த விற்பனைச் சந்தையில் கடந்த நான்கு வாரங்களாகக் காய்கறி வரத்து அதிகமாக உள்ளது. கர்நாடகா, ஆந்திரா மற்றும் பிற மாநிலங்களிலிருந்து காய்கறி வரத்து அதிகமாக உள்ளதால் காய்கறியின் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. ஜனவரி 29 நிலவரப்படி, முள்ளங்கி, முட்டைகோஸ், புடலங்காய், நூல்கோல் மற்றும் கத்திரிக்காய் கிலோ ரூ.5 ஆகவும், தக்காளி ரூ.6 ஆகவும் பீட்ரூட் ரூ.7 ஆகவும், உருளை ரூ.9 ஆகவும், பீன்ஸ் ரூ.12 ஆகவும், வெங்காயம் ரூ.30 ஆகவும், சிறிய வெங்காயம் ரூ.32 ஆகவும், வெண்டைக்காய் ரூ.20 ஆகவும் விற்பனையாகிறது.

இந்த விலை உயர்வு குறித்து கோயம்பேடு மலர் மற்றும் காய்கறி வர்த்தகச் சங்க செயலர் கூறுகையில், “முன்னதாக தினமும் 350 லாரிகளில் காய்கறிகள் சந்தைக்கு வருவது வழக்கம். தற்போது தினமும் 450 லாரிகள் காய்கறிகளை ஏற்றிக்கொண்டு வருகின்றன. பொதுவாக தமிழகத்தைச் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து மட்டுமே காய்கறிகள் வரும். இப்பருவ ஆண்டில் மழை நன்றாக இருந்ததால் கிருஷ்ணகிரி, ஒசூர், பண்ருட்டி, திண்டிவனம், ஒட்டன்சத்திரம் போன்ற இடங்களிலிருந்தும் தினமும் காய்கறிகள் கோயம்பேடுக்கு வந்த வண்ணம் இருக்கின்றன. காய்கறிகள் கெட்டுப்போவதைத் தடுக்க வியாபாரிகளிடம் குறைந்த விலைக்கே விற்கச் சொல்கின்றோம்” என்றார்.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

செவ்வாய் 30 ஜன 2018