மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 30 ஜன 2018

ஆண் குழந்தை பிறக்கும் வரை குழந்தை பேறு: விளைவு?

ஆண் குழந்தை பிறக்கும் வரை  குழந்தை பேறு: விளைவு?

இந்தியாவில் குழந்தை பாலின பாகுபாடு குறித்து பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வந்தாலும், இன்னும் மக்கள் ஆண் குழந்தைதான் வேண்டும் என்பதில் மிகவும் தீவிரமாக இருக்கிறார்கள். இது, சமீப காலமாகப் புது வடிவத்தை எடுத்துள்ளது. அதாவது, அடுத்த முறையாவது ஆண் குழந்தை பிறக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அடுத்தடுத்து குழந்தை பெற்றுக்கொள்வதால், அதிகளவில் பெண் குழந்தைகள் பிறந்து விடுகின்றனர்.

பெரும்பாலான இந்தியர்கள் ஆண் குழந்தை பெற்றுக்கொள்ளும் வரை குழந்தை பேற்றைத் தொடர்கிறார்கள் என ஜனவரி 29ஆம் தேதி வெளியான பொருளாதார சர்வே 2017-18இல் கூறுகிறது. இதில், ‘ஆண் குழந்தைகளுக்கான விருப்பம் அதிகமாகின்றபோது, பெண் குழந்தைகளுக்குக் கிடைக்கக் கூடிய வளங்களை அழிக்கிறது. ஒரு குடும்பத்தில் முதலில் ஆண் குழந்தை பிறக்கின்ற பட்சத்தில், அவர்கள் அடுத்த குழந்தைக்குச் செல்வதில்லை. அதுபோன்று, குடும்பத்தில் முதலில் பெண் குழந்தை பிறந்துவிட்டால், அடுத்து ஆண் குழந்தை பிறக்கும் வரை குழந்தை பேறு நடக்கிறது.

இதன் விளைவாக, இந்தியாவில் 21 மில்லியன் ‘தேவையற்ற பெண்கள்’ இருக்க முடியும். இந்தப் பெண்கள் அனைவரும் ஆண் குழந்தைகளாக இருப்பார்கள் என்ற எண்ணத்தில் பெற்றெடுத்த பெற்றோர்களின் குழந்தைகள்.

உலக சுகாதார அமைப்பு அளித்த தகவலின்படி, ஒவ்வொரு 100 பெண்களுக்கும் 105 ஆண்களும் உள்ளனர். இந்தியாவில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் பாலின விகிதம் மாறுபடுகிறது. கேரளா போன்ற மாநிலங்களில் பாலின வேறுபாடு பார்த்து கருக்கலைப்பு முறை பின்பற்றுவதில்லை. அதேசமயத்தில், பஞ்சாப், ஹரியானா போன்ற மாநிலங்களில் ஆண் குழந்தைகளுக்கு அதிகளவில் முக்கியத்துவம் அளிக்கின்றனர். ஒரு விதத்தில், பிறந்த பெண் குழந்தைகளின் வாழ்க்கை முன்னேற்றம் அடைந்து வருகிறது. ஆனால், இந்த சமுதாயம் குறைந்தளவிலே பெண் குழந்தைகள் பிறக்க வேண்டும் எனக் கருதுகின்றனர்’ என சர்வேயில் கூறப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

செவ்வாய் 30 ஜன 2018