மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 30 ஜன 2018

கட்டணம் உயர்வு: கனிமொழியின் உளவியல் பார்வை!

கட்டணம் உயர்வு: கனிமொழியின் உளவியல் பார்வை!

கட்டண உயர்வினால் பெண் குழந்தைகளின் கல்வி எவ்வாறு பாதிக்கப்படும் என்பதை திமுக எம்.பி கனிமொழி உளவியல்பூர்வமாக எடுத்துரைத்தார்.

பேருந்து கட்டணம் கடுமையாக உயர்த்தப்பட்டதைக் கண்டித்து, திமுக மற்றும் தோழமை கட்சிகளின் சார்பில் மாநிலம் முழுவதும் கடந்த 27ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி கலந்துகொண்டு உரையாற்றினார்.

ஆர்ப்பாட்டத்தில் பேசிய கனிமொழி, பேருந்து கட்டண உயர்வினால் மாணவர்களும், பெண் குழந்தைகளும் எவ்வாறு பாதிக்கப்படுகின்றனர் என்பதை உளவியல்பூர்வமாகப் பேசினார். கனிமொழி பேசுகையில், “நம் வாக்குகளை நாமே மதிக்காமல் செய்த தவறால்தான் இன்று இந்தப் பேருந்து கட்டண உயர்வை சந்தித்துக் கொண்டிருக்கிறோம். 67 முதல் 70 சதவிகிதம் வரை, ஒரே நாளில் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது” என்று பேசினார்.

தொடர்ந்து, “குறைந்தபட்சம் மக்களின் அத்தியாவசியத் தேவையான பேருந்து கட்டணத்துக்காவது மானியம் வழங்கி மக்களின் வயிற்றில் அடிப்பதையாவது நிறுத்தலாமா இல்லையா? ஆனால், அதற்குக்கூட இந்த அரசுக்கு மனமில்லை. ஒரே நாளில் 67 முதல் 70 சதவிகிதம் வரை பேருந்து கட்டணத்தை உயர்த்தினால், ஒரு சாதாரண குடும்பம் இந்த உயர்வை எப்படி தாங்கும்? சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவர் ஒருவர் வேலைக்கு செல்கிறார் என்றால், மாதந்தோறும் 600 ரூபாய் செலவாகும். இப்போது அது 1,000 ரூபாயாக மாறியிருக்கக்கூடிய சூழல் உருவாகியுள்ளது. மாதம் 4,000 ரூபாய் சம்பளம் பெறக் கூடிய ஒருவர் தனது சம்பளத்தில் நான்கில் ஒரு பகுதியைப் பேருந்துக்காக மட்டுமே செலவிடக் கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது. இப்படி செலவு திடீரென்று அதிகரித்தால் அந்தக் குடும்பம், உணவு கல்வி போன்ற இதர செலவுகளை எப்படி பூர்த்தி செய்வார்கள்?” என்று கேள்வியும் எழுப்பினார்.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

மீனவப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: வடமாநில இளைஞர்கள் கைது!

6 நிமிட வாசிப்பு

மீனவப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: வடமாநில இளைஞர்கள் கைது!

100 நாள் அட்டைக்கு லஞ்சம்: யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம ...

3 நிமிட வாசிப்பு

100 நாள் அட்டைக்கு லஞ்சம்: யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்!

செவ்வாய் 30 ஜன 2018