மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 30 ஜன 2018

கிச்சன் கீர்த்தனா: டோனட்ஸ்!

கிச்சன் கீர்த்தனா: டோனட்ஸ்!

பெட்ரோல் செலவே பெரும் செலவாகிப் போகிறது என அலுத்துக்கொண்டே, லிட்டர் எவ்வளவு எனத் தெரிந்துகொள்ளாமலேயே 100 ரூபாய்க்கு பெட்ரோல் போட்டுக்கொண்டிருக்கிறோம். மளிகை கடையிலோ, காய்கறி கடையிலோ எதிர்த்து கேட்பது போல இங்கே கேட்க முடியாமல் சலித்துக்கொண்டே செல்கிறோம். இருந்தாலும் பேருந்து கட்டண ஆர்ப்பாட்டமும் மக்களின் கேள்வியும் இருந்துகொண்டுதான் இருக்கிறது. எது எப்படியோ... நமக்கு சோறுதான் முக்கியம் என சாப்பிட செல்பவர்களும் சமைக்க செல்பவர்களும் உண்டு. சிறுவர்களும் தங்களுக்கான நொறுக்குத் தீனியை எடுத்துக்கொண்டு டிவியின் முன்பு அமர்ந்துவிடுகின்றனர். அதை ஏன் கடையில் வாங்கிக்கொடுக்க வேண்டும்? வீட்டிலேயே செய்வோமா? வாருங்கள் இன்றைய ஸ்நாக்ஸ் மெனு, டோனட்ஸ்.

தேவையானவை:

மைதா மாவு - கால் கிலோ, ஈஸ்ட் - ஒரு டீஸ்பூன், சர்க்கரை - கால் கிலோ, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, ஈஸ்ட், உப்பு, ஒரு டேபிள்ஸ்பூன் சர்க்கரை சேர்த்துத் தண்ணீர் ஊற்றி நன்கு பிசைந்து கொள்ளவும். இதை ஈரமான துணியால் மூடி, ஒரு மணி நேரம் வைக்கவும். இப்போது மாவு நன்கு உப்பி இருக்கும். இதை பெரிய பெரிய உருண்டைகளாகச் செய்து மீண்டும் 15 நிமிடங்கள் அப்படியே வைக்கவும்.

பிறகு, சிறு உருண்டைகளாக்கி பூரி கட்டையால் மெதுவாகத் தேய்க்கவும். ஒரு சிறு மூடியால் நடுவில் அழுத்தினால் மெதுவடை போல் ஓட்டை வரும். இதுபோல் எல்லாவற்றையும் செய்யவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி, ஒவ்வொன்றாகப் போட்டுப் பொன்னிறமாக எடுத்து, மீதியுள்ள சர்க்கரையில் அழுத்தி எடுக்கவும். செய்யும்போதே சாப்பிடத் தோன்றும். எனக்கும் அப்படித்தான் தோன்றியது. செய்ததில் பாதியை நானே சாப்பிட்டுவிட்டேன்.

கீர்த்தனா சிந்தனைகள்:

மார்க்கெட்டில் குவிந்த சின்ன வெங்காயம்: விலை சரிவால் விவசாயிகள் ...

3 நிமிட வாசிப்பு

மார்க்கெட்டில் குவிந்த சின்ன வெங்காயம்: விலை சரிவால் விவசாயிகள் கவலை!

உள்ளூர் மொழிகளும் தேசிய மொழிகள் - கல்வி அமைச்சர்!

3 நிமிட வாசிப்பு

உள்ளூர் மொழிகளும் தேசிய மொழிகள் - கல்வி அமைச்சர்!

நான்கு வழிச் சாலை பணியைத் தடுத்து நிறுத்திய கிராம மக்கள்!

3 நிமிட வாசிப்பு

நான்கு வழிச் சாலை பணியைத் தடுத்து நிறுத்திய கிராம மக்கள்!

செவ்வாய் 30 ஜன 2018